பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tran

110

trial



transactions – நடவடிக்கைகள்: கொடுக் கல் வாங்கல். இருவருக் கிடையே அல்லது இரு கணக்குகளுக்கிடையே நிகழும் பணம், பொருள் அல்லது பணிமாற்றத்தை விளைவிக்குஞ் செயல்கள். இவை பண நடவடிக் கைகள்,கடன் நடவடிக் கைகள் என இருவகை.

transaction, aspects of — நடவடிக்கையின் தன்மைகள்: இரண்டு: பற்றுத் தன்மை, வரவுத் தன்மை.

transfer deed - மாறுகை ஆவணம்: ஒருவரிடமிருந்து மற் றொருவருக்குச் சொத்தை மாற் றும் ஆவணம்.

transfer entry – மாற்றுகைப் பதிவு: வசூலிக்க முடியாத கடனை வராக்கடன் என்னும் நட்டக் கணக்கல் மாற்றி, அக் கடனாளியின் கணக்கை முடித்தல். இது ஒரு தலைப்பிலிருந்து மற்றொரு தலைப்புக்கு மாறு வது.

transferee - மாறுகை பெறுநர்: மாறுகையைப் பெறுபவர்.

transferor - மாற்றுநர்: மாறுகை செய்பவர்.

transfer form – மாற்றுகைப் படிவம்: சொத்து மாற்றுகைக் குரிய படிவம்.

transfer payment – மாற்றுகை வருமானம்: ஓய்வூதியம், வேலையின்மை நன்மைகள், உதவித் தொகை முதலியவை. இவற்றில் கொடுபட வேண்டிய சரக்குகள் எவையும் இல்லை. மொத்தத் தேசிய விளைபொரு ளைக் கணக்கிடும் பொழுது, இவை நீக்கப்படும்.

traveller's cheque – பயணிக் காசோலை: வெளிநாடு செல் லும் ஒருவருக்கு அந்நாட்டுச் செலாவணியில் பணம் பெற வங்கி வழங்கும் காசோலை. பாதுகாப்பானது.

treasurer - பொருளர்: ஒரு நிறு வனத்தின் அலுவல் பொறுப் பாளர்களில் ஒருவர். அதன் பண நடவடிக்கைகளைக் கவ னிப்பவர்.

treasury - கருவூலம்: அரசுப் பணம் உள்ள இடம். இதில் அரசுக்குச் சேரவேண்டிய பணம் போடப்படும். அது கொடுக்க வேண்டிய பணமும் எடுக்கப் படும். எடுப்பது செல வினம். போடுவது வரவினம்.

treasury stocks – கருவூல இருப்புகள்.

treaty - ஒப்பந்தம்: நாடுகளுக் கிடையே ஏற்படும் முறையான உடன்பாடு. முதன்மையானது வணிக ஒப்பந்தம்.

trial balance - இருப்பாய்வு: பற்றிருப்புகளை ஒரு பகுதி