பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

unit

114

Value


 பயன்படுத்துபவர்களின் மதிப்பைக்கணக்கிடவும் கணக்கு வைக்கவும் பயன்படுவது

unit pricing – அலகு விலையிடல்: ஒரு விளை பொருளின் ஒரு தனிஅலகில் விலையைக் காட்டுவது

unit profit – அலகு இலாபம்: 90 லகு உற்பத்திக்கு ஆகும் இலாபம் அல்லது நட்டம்

unit trust - அலகுக் கட்டளை: பங்குச் சந்தைத் துறையை மேலாண்மை செய்ய அமைந்த அமைப்பு. இதிலிருந்து சில முதலீட்டாளர்கள் அலகுகள் வாங்கலாம்

utility – பயன்பாடு: ஒரு சரக்கு அல்லது பணியை நுகர்வதிலிருந்து ஒரு தனியாள் பெறும் அகத்திண்மையுள்ள நன்மை. மதிப்போடு ஒப்பிடப்படுவது

utility-function — பயன்பாட்டுசார்பு: தனியாட்களின் முன்னுரிமைகளுக்கு வேறுபட்ட சரக்குகளையும் பணிகளையும் தொடர்புபடுத்துவது. சில உய்மானங்களைச் செய்து, சந்தைகள் நுகர்வோர் ஆகியோரின் நடத்தையைப் பகுத்துப் பார்க்கப் பயன்படுவது

utmost good faith - மிகுநம்பிக்கை: காப்புறுதிப் பயிற்சியின் அடிப்படை நெறிமுறை. காப்பீடு செய்யவிரும்புவோர் எல்லா உண்மைகளையும் தவறாது கூற வேண்டும் என்பது நெறிமுறை



V

value - மதிப்பு: ஒன்று மற்றொன்றின் தகுதியை உயர்த்துதல். பொருளியலிலுள்ள முதன்மையான சிக்கல்களில் ஒன்று மதிப்பை அறுதியிடுதல் ஆகும். இதற்கு இரு முதன்மையான அணுகுமுறைகள் உள்ளன. 1) தொன்மைப்புலமும் மார்க்சியப்புலமும் மதிப்பைப் புறத்திண்மை உள்ள மெய்ம்மையாகக் கருதும். இது உழைப்பின் உட்பாடாக அளவாக்கப்பட்ட பொருள்களாகவோ பணிகளாகவோ மாறுவது. 2) புதுத் தொன்மைப்புலம் மதிப்பை அகத்திண்மையுள்ள ஒரு பண்பாகக் கருதும். இப்பண்பு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் பற்றாக்குறையைச் சார்ந்தது. தற்பொழுது பெரும்பான்மையான பொருளியலார் புதுத் தொன்மைப்புலக் கருத்தையே ஆதரிக்கின்றனர்

value received – மதிப்பு பெறப்பட்டது: மாற்றுண்டியலில் காணப்படும் சொற்கள். அதன் மதிப்பிற்குரிய பொருள்களுக்குக் கொடுபாடு உண்டு என்பது பொருள்