பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

VΑΤ

115

vou


VAT - மதிப்பு கூட்டப்பட்ட வரி: கொள்கை நிலையில் இது மதிப்போடு சேர்க்கப்பட்ட வரி. நடைமுறையில் இது விற்பனை வரியை ஒத்தது

velocity of circulation – சுழல் விரைவு: பணப்புழக்க விரைவு. ஓரலகுப் பணம் பயன்படும் சராசரித் தடவைகளின் எண்ணிக்கை. இது வருமானச் சுழல் விரைவு, நடவடிக்கைப் புழக்க விரைவு என இருவகை

vendor - விற்பவர்: சரக்குகளையும் பணிகளையும் விற்பவர்

venture capital – துணிச்சல் முதலீடு: வரும் இடரைக்கருத்தில் கொள்ளாமல் நன்நம்பிக்கையில் செய்யப்படும் முதலீடு

vested interest – ஆதாயநலன்: வருநலன் 1) சட்டத்தில் சொத்து நலம் தவறாது வரக்கூடியது. 2) தொழில், திட்டம், நடவடிக்கை முதலியவற்றில் தனிநலனை எதிர்பார்த்தல். ஆதாயம் இல்லாதது எதிர்பார்ப்பு நலனாகும்

video conferencing – உருக்காட்சிக் கூட்டம்: அனைத்துலக அளவில் ஒருவரைப் பார்த்துப் பேசுவதற்குரிய ஏற்பாடு. இதனால் கூட்டங்கள். ஆய்வரங்குகள் முதலியவை நடத்தலாம். விரைந்த தொழில் நுட்பப்பயன்களில் ஒன்று

video text - உருக்காட்சிப் பதிவுச் செய்தி: இது ஒரு செய்தி முறை. இதில் செய்தி அல்லது தகவல் தொலைவிலுள்ள கணிப் பொறியிலிருந்து தொலைக் காட்சித் திரையில் காட்டப்படும். இது பார்வைச் செய்தி, தொலைப்பதிவுச் செய்தி என இருவகை

visibles - புலானவன: காண்பன. சரக்குகளை இறக்குமதி செய்வதற்குரிய கொடுபாடுகளும் ஏற்றுமதிசெய்வதற்குரிய சம்பாதிப்புகளும். வணிக இருப்புகள் என்பவை பார்ப்பனவற்றாலனவையே சில சமயம் இவை புலனாகும் இருப்புகள் என்றும் கூறப்படும்

voluntary liquidation — கட்டாயக் கலைப்பு: ஒரு நிறுமத்தை விரும்பி அல்லது எதிர்பார்த்துக்கலைத்தல்

voting shares — வாக்களிப்புப் பங்குகள்: ஒரு நிறுமத்தின் சிறப்புக் கூட்டத்திலும் பொதுக்கூட்டத்திலும் பங்குதாரர்கள் வாக்களிக்க உரிமையுள்ளவர்கள். பொதுப் பங்குகளுக்கு இவ்வுரிமை உண்டு

voucher - வரவுச்சீட்டு : செலவு செய்தற்குப் பணம் பெற்றுக் கொள்பவரிடம் வாங்கும் சீட்டு. இது ஒர் ஆவணத்தைப் பெற்றுக் கொள்பவரிடமும் வாங்கலாம். கணக்குத் தணிக்கை செய்ய இது உதவுவது