பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

wage

116

Wel






W

wage freeze – கூலிமுடக்கம்: குறிப்பிட்ட காலத்திற்கு அப்பொழுதுள்ள அளவில் கூலியை உறுதிசெய்து பண வீக்கத்தைத்தடுக்க அரசு மேற்கொள்ளும் முயற்சி.

waiver - 1) தள்ளுபடி: ஓர் உரிமையை நடைமுறைப்படுத்தாமாலிருத்தல் 2) தள்ளுபடி செய்பவர்.

ware house – கிடங்கு: 1) சரக்குகள் சேமிக்குமிடம். துறைமுகத்திற்கருகில் இருப்பது 2) தானியங்கள் சேமிக்குமிடம். இது இந்திய உணவுக்கழகத்திற்கும் தமிழ்நாடு நுகர்பொருள் கழகத்திற்கும் உண்டு.

warrant - கட்டளைக்காப்பு: 1) ஓர் ஈடு. இதைக் கொண்டிருப்பவர் ஒரு நிறுமத்தின் பொதுப் பங்குகளுக்குப் பணம் செலுத்தலாம். இது குறிப்பிட்ட நாளிலும் குறிப்பிட்ட விலையிலும் நடைபெறலாம். 2) சரக்குகள் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன என்பதை மெய்ப்பிக்கும் சான்று. பொதுவாகக் கட்டளைக் காப்புகள் வங்கிக் கடனுக்கு எதிராகப் பிணைகளாக இருப்பவை.

Warranty -கட்டளை உறுதி: 1) ஓர் ஒப்பந்தத்தில் செய்யப்படும் சான்று இருவருக்கிடையே உணரப்படுவது. 2) காப்புறுதி முறிமத்திலுள்ள நிபந்தனை 3) உற்பத்தியாளரின் எழுத்து உறுதி மொழி. ஒரு பொருள் விற்கப்படும் பொழுது கொடுக்கப்படுவது. ஓராண்டுக்கட்டளை உறுதி என்றால் அதற்குள் பழுதுபட்டால், இலவசமாக அது பழுது பார்த்துத் தரப்படும் எ-டு. கடிகாரம், மின் விசிறி.

wasting asset — அழிவுறு த்து: எந்திரம்.

way bill - வழிப்பட்டியல்: வாடகை ஊர்தியாளர்கள் சரக்குகளை அனுப்புபவர்கள் சார்பாக வாங்குபவருக்குக் கொடுப்பது. இதைக் காட்டியே அவர் அனுப்பப்பட்ட சரக்குகளை எடுக்கமுடியும்.

weighted average – எடையிட்ட சராசரி: ஒவ்வோர் ஆண்டு இலாபத்திற்கும் எடையிட்ட பின்னரே சராசரி காணப்படுவது.

wealth- சொத்து: செல்வம். ஒரு தனியாளோ பலரோ சேர்ந்து கொண்டிருக்கும் உடமைகளின் மதிப்பு.

wear and tear – அழிவு தேய்வு: சேதாரம் ஏற்படுவதால் தம் வாழ்வில் சொத்துகள் தேய்மானத்திற்கு உட்படுபவை.

welfare economics – நலப்பொருளியல்: சமுதாய