பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

whi

117

yield




நலனை ஆராயும் பொருளியல் துறையின் ஒரு பிரிவு

white goods – வெண்சரக்குகள்: நுகர்பொருள்கள்: குளிர்ப்பதனிகள், சமைப்பிகள், அரைப்பிகள்

whole sale – மொத்த விற்பனை

whole saler — மொத்த விற்பனை வணிகர்: சரக்குகளை மொத்தமாக வாங்கிச் சில்லரை வணிகர்களுக்குக் கொடுப்பவர். மொத்தமாகவும் விற்பவர்

will - உயில்: ஒருவர் இறக்கு முன் தன் சொத்துகளை விரும்புவருக்கு எழுதி வைத்தல். பதிவு செய்த உயிலே சட்டப்படி செல்லக் கூடியது

working assets – நடப்பு சொத்துகள்: நடப்பு மூலதனம்

working capital – நடப்பு முதல்: அன்றாடத் தொழில் நடத்த வேண்டிய முதல்

working days — வேலை நாட்கள்: நடப்பு நாட்கள். சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள நீங்கலான ஒரு வnர நாட்கள்

writ - எழுத்தானை: நீதிமன்றம் வழங்கும் கட்டளை.

writ petition - எழுத்தாணை மனு

write-off - போக்கெழுதல்: ஐந்தொகையில் வேண்டாதவற்றை நீக்குதல் எ-டு. வராக்கடன், பழைய எந்திரம்

write down value – இறக்கி எழுதப்பட்ட மதிப்பு: தேய்மானம் நீக்கியபின் ஒரு சொத்தின் மதிப்பு, கணக்கிடும் நோக்கங்களுக்காக எழுதப்படுவது



X

xerox - உலர்நகலி: மூலத்தின் நகலை எடுக்கத் தற்காலத்தில் அதிகம் பயன்படும் மின்னணுக் கருவியமைப்பு.

x-inefficiency – எக்ஸ் திறன் இன்மை: பெரும் அளவுக்குக்கீழ் ஒரு நிறுமத்தின் திறன் குறையும் அளவு. கடும்போட்டி, நலமில்லாத் தொழிலாளர் தொடர்புகள், மேலாளர் திறமை இன்மை முதலியவை காரணிகள்



Y

yellow pages- மஞ்சள் பக்கங்கள்: வணிகத் தகவல் திரட்டு. விளம்பரங்களைக் கொண்டு வணிக வளர்ச்சிக்கு வழிவகுப்பது

yield - விளைபயன்: 1) முதலீட்டு வருமானம் 2) வரிமூலம் கிடைக்கும் வருமானம் 3) பயிர் விளைவு