பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

acc

3

acc


account, executive – கணக்கு நிறைவேற்றுநர்: ஒரு வாடிக்கையாளரின் தொழில் சரியாக நடக்க ஒரு முகமையகத்தில் காரணமாக இருப்பவர்.

account keeping – கணக்கு வைப்பு: கணக்கைச் சரிவர வைத்துக் கொள்ளுதல்.

account management group — கணக்கு மேலாண் குழு: ஒரு முகமையகத்தில் தன் வாடிக்கையாளருக்காக எல்லா வேலைகளையும் செய்யும் பணிக்குழு. இக்குழுவிலுள்ளவர்கள் இயக்குநர், கணக்கு மேலாளர். கணக்குத் திட்டமிடு பவர், கணக்கு நிறைவேற்றுநர்

account payee – கணக்கு பெறுநர்: காசோலைக் கீறலில் எழுதப்படும் சொற்கள். பெறுபவர் தம் காசோலையை வரவுவைத்தே பணத்தைப் பெற இயலும். இது மோசடியைத் தவிர்ப்பது.

account rendered – கொடுக்கப்பட்ட கணக்கு: கணக்கு அறிக்கையில் காணப்படும் செலுத்தப்படாத தொகை. இதன் விபரங்கள் முந்திய அறிக்கையில் அளிக்கப்பட்டிருக்கும்.

accounts – கணக்குகள்: ஒரு நிறுமத்தின் உயர் தொகையும் வரவும் செலவும். பா. account, book of accounts.

accounts, kinds of — கணக்கு, வகைகள்: முதன்மையாக மூன்று: 1) ஆள்சார் கணக்குகள்: தனிக்கணக்குகள் 2) சொத்துக் கணக்குகள் 3) பெயரளவுக் கணக்குகள்.

accounts payable – கொடுக்கப்பட வேண்டியவை: சரக்குகள் வழங்கியவருக்குக் கொடுக்கப்பட வேண்டியவை.

account sale – விற்பனைக் கணக்கு: ஒருவர் அல்லது ஒரு நிறுமத்தின் சார்பாக நடைபெறும் விற்பனை விவரங்கள் பற்றிய அறிக்கை. ஒப்புக்கொள்ளப்பட்ட செலவு, கழிவு முதலியவை போக எஞ்சியுள்ள ஆதாயத்தைக் காண்பிப்பது.

accounting – கணக்கு, வைப்பு: கணக்குப் பதிவு.

accounting concepts — கணக்குவைப்புக் கருத்துகள்: கணக்குவைப்புத் தொடர்பாகவுள்ள அடிப்படைக் கொள்கை நிலைக்கருத்துகள். இவை நான்கு வகைப்படும்:

1) நிலைப்பு நிறுவனக் கருத்து: நிறுவனம் என்பது நிலைத்துப் பயனளிப்பது. 2) ஆக்கக் கருத்து: பெருகிச்செல்லும் வரவு செலவுகளைப் பதிதல். 3) மாறாக் கருத்து: ஒரு பருவத்திலிருந்து மற்றொரு பருவத்-