பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

art

10

at



articles of association – சங்கநடை முறை விதிகள்: ஆட்சி மேலாண்மைபற்றிய நிறும விதிகளும் ஒழுங்காற்று ஆணைகளும் இத்தொகுப்பில் அடங்கி இருக்கும். தோற்றுவிப்பாளர்கள் இவ்விரு ஆவணங்களிலும் ஒப்பமிடுவர்.

artificial person – செயற்கை ஆள்: சட்டத்தினால் மட்டும் அடையாளம் கண்டறியக்கூடிய ஆள். எ-டு. நிறுமம். இதன் மீது வழக்குத் தொடரலாம். அது பிறர் மீது வழக்குத் தொடரலாம். ஆகவே, ஓர் ஆள் என்று கருதப்படுவது. ஆனால், அது உண்மை ஆளோ தனி ஆளோ இல்லை.

ascertained goods – அறுதியிட்ட சரக்குகள்: உறுதிசெய்யப்பட்ட சரக்குகள்.

as per advice — அறிவுப்புப்படி: மாற்றுண்டியலில் எழுதப்படும் சொற்கள். பெறுபவர்மீது உண்டியல் வரையப்பட்டுள்ளது என்று பொருள்.

assembled stock – உடன் பாட்டு இருப்பு: ஈடு. வழக்கமாக, இது பொதுப் பங்குத் தொகையாகும்.

asset - இருப்பு, சொத்து: தொட்டோ தொடாமலோ உணரக்கூடிய பொருள். நிலம், வீடு, எந்திரம் முதலியவை தொட்டு உணரக் கூடியவை. நற்பெயர், நூலுரிமை முதலியவை தொட்டு உணர இயலாதவை பா,deferred asset.

asset value — இருப்பு மதிப்பு: சொத்து மதிப்பு, பொறுப்புகளை நீக்கி, ஒரு நிறுமத்தின் சொத்துகளின் மொத்த மதிப்பை, அதன் பொதுப் பங்குத்தொகைகளால் வகுக்கக்கிடைக்கும் ஈவு. அதாவது, ஒவ்வொரு பங்குத் தொகைத்குரிய மதிப்பும் இதில் அடங்கும்.

assignee - உரிமை மாற்றம் பெறுபவர்: உரிமை மாற்றத்தை நுகர்பவர். .

assignment – உரிமை மாற்றம்: ஒருவர் தம் சொத்தையோ ஓர் ஆவணத்தையோ இன்னொரு வருக்கு மாற்றுதல்.

associate – கூட்டாளி: பங்காளார்.

assurance – காப்புறுதி; சாவு முதலிய நிகழ்ச்சிகளுக்கு எதிராகக் காப்பீடு செய்தல். பா. life assurance.

assured- காப்புறுதி பெற்றவர்:ஆதாயத்தை அடையக் காப்புறுதியில் குறிக்கப்பட்டவர்.

assured tenancy – காப்புறுதி பெற்ற குடிவாரம்.

at best - இயன்ற வரை: முடிந்த வரை. கிடைக்கக்கூடிய விலையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு