பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

att

11

ave



பங்குத் தொகை, இருப்பு முதலியவற்றை வாங்கவோ விற்கவோ தரகருக்கு அளிக்கப்படும் குறிப்பு.

attachement — பற்றுகை: சொத்தைப் பறிமுதல் செய்தல்.

attendance book – வருகை ஏடு: பணிக் குழுவினர் அன்றாடம் வேலை நாட்களில் வருகைப் பதிவுசெய்யும் ஏடு.

at sight - பார்வையில்: அளித்தவுடன் பணம் பெறுதல்.

auction - ஏலம்: ஒரு பொருளைப் பேரம் பேசி விலைக்கு விற்றல்.

audit - தணிக்கை: ஒரு நிறுமத்தின் ஆண்டுக் கணக்குகளை ஆய்வு செய்தல். இது புறத்தணிக்கை, அகத்தணிக்கை என இரு வகைப்படும். புறத்தணிக்கையே சிறந்தது. இது தகுதிபெற்ற தணிக்கையாளரால் செய்யப்படுவது, சட்ட உரிமை கொண்டது.

auditor - தணிக்கையாளர்: தணிக்கையை மேற்கொள்பவர். இவர்கள் புறத்தணிக்கையாளர்கள், அகத்தணிக்கையாளர்கள் என இரு வகைப்படுபவர். புறத்தணிக்கையாளர்கள் பெரிதும் விரும்பப்படுபவர்.

auditor's remuneration — தணிக்கையாளர் ஊதியம்: தணிக்கைக்காகத் தணிக்கையாளருக்குக் கொடுக்கப்படும் குறிப்பிட்ட தொகை.

auditor's report – தணிக்கையாளர் அறிக்கை: தணிக்கையாளர் தாம் செய்த தணிக்கை குறித்து அளிக்கும் அறிக்கை. இது எல்லா விவரங்களையும் கொண்டிருக்கும். ஒரு நிறுமத்தின் நிலையைக் காட்டும் ஆடி இது.

authorized share capital — அனுமதிக்கப்பட்ட பங்கு முதல்: பா, share capital.

authority - அதிகாரம், அதிகாரத்தார்: ஆணை உரிமை, ஆணை உரிமையாளர்.

available earnings – கிடைக்கக்கூடிய சம்பாதிப்புகள்.

average bond – சராசரிப் பத்திரம்: தேவைப்படின், பொதுச் சராசரி அளிப்புகளைக் கொடுப்பதற் குரிய உறுதிமொழி.

average clause — சராசரி உட்பிரிவு: தீக்காப்புறுதி முறியில் பயன்படுவது. ஓர் உரிமை கோரலில் கொடுக்கப்படும் தொகை, காப்புறுதி செய்யப்பட்ட இன மதிப்பின் வீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்பது அவ்விதி.

average cost – சராசரி ஆக்கச் செலவு: சராசரி அடக்கச் செலவு, ஓரலகு உற்பத்திக்கு ஆகும் சராசரிச் செலவு.