பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ave

12

bal



average loss – சராசரி இழப்பு: சராசரி நட்டம்.

average stock - சராசரி இருப்பு: இருப்பு எடுப்புகளைக் கணக்கிடும் முறை. இதன்படி இருப்பிலுள்ள சரக்குகளின் சராசரி அடக்கத்திலிருந்து சரக்குகள் எடுக்கப்படும்.

average variable cost – சராசரி மாறும் அடக்கச் செலவு: உற்பத்தி அலகுகளின் மாறும் அடக்கச் செலவைக் குறிப்பிட்ட காலத்தில் சராசரி எடுத்தல்.

aviation broker - வானப்போக்குவரவுத் தரகர்: வானூர்திப் பயணம், வானூர்தியில் சரக்குகளைப் பதிவு செய்தல் முதலியவற்றிற்கு ஏற்பாடு செய்பவர்.

aviation insurance – வானப்போக்குவரவுக் காப்புறுதி: வானுர்திச் சரக்குகள், உயிரிழப்பு, பொருள் இழப்பு ஆகிய வற்றிற்குக் காப்பீடு செய்தல்.

award - தீர்ப்பு: நடுவர் தீர்ப்பு முடிவு. 2). விருது: மாநில விருது,மையவிருது.

B

back date — பின்னாளிடல்: பின்தேதி குறித்தல்.1) பயன் கருதி ஒர் ஆவணத்தில் அது எழுதப்பட்ட நாளுக்கு முன்னதாகத் தேதியிடல். 2) சம்பளஉயர்வு, அக விலைப்படி முதலியவை பின் தேதியிலிருந்து கொடுக்கப்படுபவை.

backing of a bill – உண்டியலை ஆதரித்தல்: மாற்றுச் சீட்டை அரவணைத்தல்.

ballor – ஒப்படைப்பவர்: சரக்கைக் கொடுப்பவர்.

ballee - ஒப்படைப்பைப் பெறுபவர்: சரக்கைப் பெறுபவர்.

bailment - ஒப்படைப்பு: சரக்கு வைத்திருப்பவர் சரக்கு பெறுபவரிடம் சரக்குகளைக் கடனுக்காகவோ பாதுகாப்பிற்காகவோ ஒப்படைத்தல். ஒப்பந்த நிபந்தனைகள்படி இது நடைபெறும். சரக்குகள் திரும்பப் பெறக் கூடியவை.

balance - இருப்பு: 2) சமநிலை.

balance of payments — அயல்நாட்டுக் கொடுப்பு நிலை: ஒரு நாடு அயல் நாட்டுடன் கொண்டுள்ள கணக்கு நடவடிக்கைகள். அதாவது, கொடுக்கல் வாங்கல். இது நடப்புக் கணக்கு,மூலதனக் கணக்கு எனப் பலவகை. இவ்விரண்டில் நடப்புக் கணக்கு வணிகக் கணக்கே. இது இறக்குமதி ஏற்றுமதி இருப்பு நிலையைப் பதிவு செய்வது. மொத்தத்தில் கணக்குகள் எப்பொழுதும் சமநிலையில் இருக்க வேண்டும். கொடுப்பு நிலையில் உபரியோ