பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

bal

13

bal



பற்றில் குறையோ துணைக் கணக்கில் சமநிலையின்மையைக் காட்டும். அந்நியச் செலவாணிக் காப்புகள் குறைகின்றன அல்லது கூடுகின்றன என்பது இதன் பொருள். கொடுப்பு நிலைப் புள்ளி விபரங்களை அளிப்பதற்குரிய மரபுகளை அனைத்துலகப் பண நிதியம் பரிந்துரை செய்துள்ளது.

balance of trade – வணிக இருப்பு நிலைக் குறிப்பு: ஒரு நாட்டின் வணிக நிலையின் முடிவுகளைக் காட்டும் கணக்குகள் நடப்புக் கணக்கைத் தோற்றுவிப்பவை. கொடுப்பு நிலைக் குறிப்பின் ஒரு பகுதி. புலனாகக் கூடியவை புலனாகாதவை ஆகிய இரண்டையும் கொண்டவை. புலனாகுபவை: வணிகப் பொருள்களான ஏற்றுமதிகள். இறக்குமதிகள். புலனாகாதவை: காப்புறுதி, நிதி, சுற்றுலா முதலியவை தொடர்பான செலவினங்கள்.

balance sheet – ஐந்தொகை: இருப்பு நிலைக் குறிப்பு. கணக்குத் தொகுதியிலுள்ள முதன்மையான அறிக்கைகளில் ஒன்று. ஆண்டு இறுதியில் கணக்கு முடிப்பின் பொழுது, ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுவது. இதிலுள்ள மூன்று முக்கிய தலைப்புகளாவன:

1)இருப்புகள்: இவை எப்பொழுதும் பொறுப்புகளுக்கும் முதலுக்கும் இணையாக இருக்க வேண்டும்.

2)பொறுப்புகள்: கொடுக்கப்பட வேண்டியவை.

3)முதல்: பல வடிவங்களில் இருப்பது. ஐந்தொகை என்னும் நிதிநிலை அறிக்கையை இருநிலைகளில் நோக்கலாம்:

1) நிறுவனச் சொத்தின் அறிக்கை: இந்நிலையில் பொறுப்புகள் நீங்கிய சொத்துகள் முதலுக்குச் சமமாக இருக்கும். இது நிறுவன உரிமையாளர்களுக்குரியவை.

2) இருப்புகளின் ஈட்டு அறிக்கை: இருப்புகளுக்கு எவ்வாறு நிதிவசதி கிடைத்தது என்பது. இது உரிமையாளர் களின் முதலாலும் கடன் வாங்கலாலும் கிடைப்பது. வரவு. செலவு என்னும் இரண்டு தன்மைகளும் சமமாக இருப்பதால், இவ்வறிக்கை ஐந்தொகை எனப்பெயர் பெறுகிறது. தவிரப் பேரேட்டுக் கணக்கு இருப்பு நிலைக் குறிப்புகளைக் கொண்டிருப்பதாலும் இதற்கு அப்பெயர்.

balancing method – இருப்புக் கட்டும் முறை: கூடுதலாக உள்ள கூட்டல் தொகை, கணக்கின் பற்று. வரவு ஆகிய இருபக்கங்-