பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

bal

14

bank



களிலும் எழுதப்படும். குறைவாகக் கூட்டல் தொகையுள்ள பக்கத்தில் கூட்டல் தொகைக்கு மேல் இருப்புக்காட்டும் தொகை எழுதப்படும். இருப்புக் காட்டும் தொகை என்பது பற்றுக் கூட்டலுக்கும் வரவுக் கூட்டலுக்குமுள்ள வேறுபடும் தொகை ஆகும்.

balancing of accounts - கணக்கை இருப்புக் கட்டல்:

balancing of ledgers - பேரேட்டுக் கணக்கை இருப்புக் கட்டல்: இதை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். பொதுவாகத் திங்கள் இறுதியிலும் அல்லது காலாண்டுக்கு ஒரு முறையும் இதைச் செய்யலாம்.

bank - வங்கி: ஒரு வகை வணிக நிறுவனம்: பல வகைப்பட்ட நிதிச் செயல்களில் ஈடுபடுவது. பணம் கொடுப்பது, வாங்குவது. கொடுப்பது கடன். வாங்குவது வைப்புத் தொகை. கடன் தனியாருக்கும் நிறுவனத்திற்கும் கொடுக்கப்படுவது. இந்தியாவில் நாட்டு வங்கிகள் (பாரதவங்கிகள்) நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள். அட்டவணை வங்கிகள் என மூவகை வங்கிகள் உள்ளன. இவற்றை எல்லாம் கட்டுப்படுத்துவது காப்பு வங்கி.

bank account - வங்கிக் கணக்கு: தனியாள் அல்லது நிறுவனம் வங்கியில் வைக்கும் கணக்கு. இது முதன்மையாகச் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு என இருவகை.

bank advance – வங்கி முன்பணம்: பா. bank loan.

bank bill — வங்கி உண்டியல்: வங்கியால் வழங்கப்படும் அல்லது உறுதியளிக்கப்படும் மாற்றுச் சீட்டு. எளிதாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடியது.

bank certificate - வங்கிச் சான்றிதழ்: குறிப்பிட்ட நாளில் ஒரு நிறும வரவில் எவ்வளவு இருப்புள்ளது என்று வங்கியின் மேலாளர் அளிக்கும் சான்றிதழ். நிறுமத்தணிக்கையாளர்களால் தணிக்கையின் பொழுது சரிபார்ப்ப்புக்காக வேண்டப்படுவது.

bank charges - வங்கிக்கட்டணங்கள்: கணக்கு வைத்திருக்கும் வாடிக்ககையாளரிடமிருந்து வங்கி வசூல் செய்யும் தொகை. குறிப்பிட்ட பணிகளுக்காக வாங்கப் படுவது. காசோலை மாற்றுதல், கடன் வட்டி, கையாளும் கட்டணங்கள் முதலியவை இதில் அடங்கும்.

bank discount — வங்கி வட்டம்: வங்கி தரும் கழிவு.

bank draft - வங்கி வரை வோலை: வங்கி உறுதிக் கா. சோலை, வங்கி தானே-