பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

bank

15

bank



வரைந்து கொடுக்கும் காசோலை. பணம் செலுத்திய பின் வழங்கப் படுவது. பணம் உறுதியாகக் கிடைப்பது.

bank guarantee - வங்கி உறுதியளிப்பு: கடனாளிக்காகக் கடனைத் தீர்க்க வங்கி வழங்கும் பொறுப்பேற்பு.

bank holidays — வங்கி விடுமுறை நாட்கள்: இவை பொது விடுமுறை நாட்கள். இவையாவை என்பதை ஒவ்வராண்டும் ஒவ்வொரு வங்கியும் விடுமுறைப்பட்டியல் என்னும் தலைப்பில் வழங்கும். விடுதலை நாள், சுதந்திர நாள், காந்தி பிறந்த நாள் முதலியவை பொது விடுமுறை நாட்கள்.

bank loan – வங்கி கடன்: வாடிக்கையாளர்களுக்குக் குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட வட்டியுடன் வங்கி வழங்கும் தொகை. வணிகக் கடன்கள் பிணையத்தின் பேரில் கொடுக்கப்படும்.

banknote - வங்கித்தாள் பணம்: இந்தியாவில் இதனைக் காப்பு வங்கி அச்சடித்து வழங்குவது.

bank of issue – வெளியிட்டு வங்கி: பணத்தாள் வெளியிடும் காப்பு வங்கி.

bank pass book - வங்கி இருப்புக்கையேடு: வாடிக்கையாளர் கணக்கில் பற்று வரவு வைக்கப்படும் ஏடு. இது சேமிப்புக் கணக்குக் கையேடு, நடப்புக் கணக்குக் கையேடு என இருவகை.

bank rate - வங்கி வீதம்: வங்கி வாங்கும் கொடுக்கும் வட்டி அளவு, கொடுப்பது வைப்புநிதிகளுக்கு. வாங்குவது கடன்களுக்கு, கடன் வட்டி அதிகமாயிருக்கும். ஆனால் வேளாண் கடன்களுக்குக் குறைந்த வட்டி.

bank reconciliation statement - வங்கிச் சரிக் கட்டுப் பட்டி: அவ்வப்பொழுது பண ஏடு காட்டும் வங்கி இருப்புச் செல்லேடு காட்டும் வங்கி இருப்பும் வேறுபடுகின்ற பொழுது, அவ்விருப்பைச் சமமாக்கச் செய்யப்படும் சரிப்பாடு. பொதுவாக, இவ்வேறுபாடு இருக்கவே செய்யும். பண ஏடு காட்டும் இருப்பை (பற்று, இருப்பு இரண்டும்) அடிப்படையாகக் கொண்டு தேவையான சரிக்கட்டுதல்களைக் கூட்டியும் கழித்தும் இருப்பைப் பெற இயலும். அல்லது செல்லேடு காட்டும் இருப்பைத் தொடக்கமாக வைத்து, அத்துடன் தேவையான சரிக்கட்டுதல்களைக் கூட்டியும் கழித்தும் பண ஏட்டு இருப்பைப் பெறலாம்.

b.reserve - வங்கிக்காப்பிருப்பு: வங்கியின் சேம ஒதுக்கீடு. வங்கி நலங்காக்க ஒதுக்கப்படுவது.