பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

bank

16

bene



banker's clearing house – வங்கித் தீர்வகம்: வங்கிகளின் கொடுக்கல் வாங்கல் நடைபெறும் இடம்.

banker's liability – வங்கியர் பொறுப்பு: வங்கி கொடுக்க வேண்டியது.

banker's reference – வங்கியர் குறிப்பு: வாடிக்கையாளரின் நிதிநிலைமை பற்றி வங்கி வழங்கும் குறிப்பு. இதை வைத்து அவருக்குக்கடன் வசதியளிக்கப்படும்.

banking - வங்கி இயல்: வங்கித் தொழிலை ஆராயுந் துறை.

bank statement — வங்கி அறிக்கை: வாடிக்கையாளரின் பற்று வரவு இருப்பு குறித்து வங்கி வழங்கும் முறையான பதிவுக் குறிப்பு.

bargain - பேரம்: வாணிபத்தில் ஒரு பொருளின் விலை குறித்து நடைபெறும் ஏற்ற இறக்கம். இது கேள்வி வடிவில் இருக்கும்.

base rate - அடிப்படைவீதம்: தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விதிக்கும் வட்டி வீதங்களுக்கு அடிப்படையாக் கொள்ளும் வட்டிவீதம்.

bear märket — கரடிச்சந்தை: விற்பனைச் சந்தை. இதில் பிணையங்கள், பணத்தாள்கள், பொருள்கள் முதலியவை விற்கப்படும்.

bearer - கொணர்நர்: மாற்றுண்டியல் அல்லது காசோலையை மாற்றுவதற்கு அளிப்பவர். இதில் "கொணர்நருக்கு அளிக்க" என்று எழுதப்பட்டிருக்கும்.

bearer cheque – கொணர்நர் காசோலை: காசோலையை மாற்றக் கொண்டுவருபவர்.

bearer securities – கொணர்நர் ஈடுகள்: கொண்டு வருபவரின் ஈடுகள் அல்லது பிணையங்கள். இவை மாற்றுவதற்குரியவை.

below par - முகப்பு விலைக்குக்கீழ்: பா. parvalue.

below the line — கோட்டுக்குக் கீழ்: ஒரு நிறுமத்தின் இலாப நட்டக் கணக்கிலுள்ள கிடைமட்டக் கோட்டுக்குக் கீழுள்ள பதிவுகளைக் குறிப்பது. 2) விளம்பரச் செலவிற்குக் கழிவு கொடுக்கப்படாததைக் குறிப்பது. 3) நாட்டுக் கணக்குகளில் முதலோடு தொடர்புடைய கொடுக்கல் வாங்கல் பற்றிக் குறிப்பது ஒ. above the line.

beneficial interest – நன்மை நலம்: சொத்தைப் பயன்படுத்துவதற்கும் நுகர்வதற்குமுரிய உரிமை.

benefits in kind – வகைசார் நன்மைகள்: சம்பளம் தவிர்த்த கைம்மாறு. இதில் வசதிகள்