பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

board

19

book



board meeting – ஆட்சியவைக் கூட்டம்: நிருவாக அவைக் கூட்டம்

boards of trade - வணிக வாரியங்கள்

bond - பத்திரம்: முறிமம். எ-டு. கடன் பத்திரம், தங்கப் பத்திரம்

bonded goods – சுங்க சரக்குகள்: வரிக்குரிய இறக்கு மதிகள். சுங்கக் கிடங்கில் வைக்கப்பட்டிருப்பவை

bonus - ஊக்க ஊதியம்: ஒருநிறுவனம் தன் பணியாளர்களுக்கு நல்லெண்ணத்தின் பேரிலும் நல்ல வேலை நடப்பதற்காகவும் கொடுக்கும் உதவி தொகை. எ-டு.

1) தீபாவளி ஊக்க ஊதியம்

2) ஊக்கத் தொகை: காப்புறுதிக்கழகம் தன் வாடிக்கையாளர்களுக்கு ஆதாயத்திற்கு மேல் கூடுதலாக வழங்கும் தொகை

3) ஊக்கப் பொருள்: ஒரு பொருளின் விற்பனையை ஊக்குவிக்க, ஒரு நிறுவனம் கூடுதலாகக் கொடுக்கும் பொருள். பொதுவாக, உரிமை கோரா ஊக்க ஊதியம், மீள் ஊக்க ஊதியம், முடிவுறு ஊக்க ஊதியம் என இது பல வகை

bonus shares – ஊக்கப் பங்குகள் : பங்குகள் வாயிலாகப் பங்காதாயம் வழங்கப்படலாம். அவ்வாறு வெளியிடப்படும் பங்குகள் ஊக்கப்பங்குகள் ஆகும்

bonus shares, benefits of - ஊக்கப் பங்குகளின் நன்மைகள்:

i) நிறுமத்திற்கேற்படுபவை:

1) நிறுமத்தின் முதல், இருப்பு நிலைக்குறிப்பில் ஒரு நல்ல நிலையைக் காட்டுதல்

2) காப்பு முதற்படுத்துகை செய்யப்படுவதால் நிறுமத்தின் கடன் தகுதி அதிகமாகும்

ii) பங்குதாரர்களுக்கு ஏற்படுபவை:

1) அதிகரிக்கப்பட்ட பங்குகளால், பங்காதயம் கூடுதலாகப் பெற வாய்ப்புண்டு

2) பங்குகளை அங்காடியில் விற்று அதிக இலாபம் பெற இயலும்

bonus shares, sources of — ஊக்கப்பங்குகளின் மூலங்கள்: 1) முதல்மீட்புக் காப்புக் கணக்கு 2) பங்கு முனைமக் கணக்கு 3) முதலின இலாபங்கள் 4) நடைமுறை இலாபங்கள் 5) மேம்பாட்டுத் தள்ளுபடிக் காப்புக் கணக்கு

book debt – ஏட்டுக்கடன்: பேரேட்டிலுள்ள கடன்

book-keeping – கணக்குப் பதிவியல்: ஒரு தொழிலுக்குரிய கணக்கை முறையாகவைக்கும் முறை. இதனால் இலாப நட்டத்தையும் ஐந்தொகையையும் தொகுக்க இயலும்