பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

book

20

break



தற்பொழுது. பல நிறுவனங்கள் இதற்கு மென்னியங்கள் (சாப்ட்வேர்) வைத்துள்ளன

book of prime entry — முதன்மைப் பதிவேடு: இரட்டை முறைப் பதிவில் ஏறுவதற்கு முன்னர் சில கொடுக்கல் வாங்கல்கள் எழுதப்பட்டுள்ள பதிவேடு. எ-டு. நாட்குறிப்பேடு, பணக்குறிப்பேடு, குறிப்பேடு

books of account – கணக்கேடுகள்: ஒரு தொழிலுக்குரிய கொடுக்கல் வாங்கல் பதிவு செய்யப்படும் புத்தகங்கள் பா. book of entry, double entry book keeping system.

book value - ஏட்டுமதிப்பு: ஒரு நிறுவனத்தில் கணக்கேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இருப்பின் மதிப்பு. தேய்மானம் நீக்கிய மதிப்பு

boom - மலர்ச்சி: மீட்புக்குப் பின்னுள்ள வணிகச் சுழற்சியின் பகுதி. பொருளாதாரம் முழுத்திறத்துடன் இயங்கும்

borrowed capital – கடன்முதல் : தொழில் முன்னேற்றத்திற்காகக் கூடுதலாக வாங்கப்படுவது

bought deal - முதல் ஏற்றம்: பொருள் ஈட்டுங் காரணத்திற்காக முதலை உயர்த்துதல்

bought ledger – கொள்முதல் பேரேடு: கொள்முதல் சரக்குகனை பதிவு செய்யப்படும் புத்தகம்

bought note – கொள்முதல் குறிப்பு: கொள்முதல் செய்தலைப் பதிவு செய்தல்

brand - குறி: அடையாளம்.

brand name – குறியிட்டுப்பெயர்: குறிப்பிட்ட விளைப் பொருளுக்குரிய வாணிபப்பெயர் எ-டு. பையோ கேஸ்ட்ரான், அல்நிக்கோ

brand loyalty — வாணிபப் பெயர்ப் பற்று: நுகர்வோர் குறிப்பிட்டட வாங்கு பொருள் மீது கவர்ச்சி கொள்ளுதல். பொருளின் விலை, பயன் முதலியவை இதற்குக் காரணங்கள் ஆகும் எ-டு. இதயம் நல்லெண்ணெய்

break-even point – சரிசம நிலை: உற்பத்தியில் ஆதாயமோ இழப்போ இல்லாத நிலை. இந்நிலை கடக்கப்படின், ஆதாயம் வரும்

break-up figures — பிரிப்பு எண்கள்: பிரித்துக்காட்டும் எண்கள்

break-up value – பிரிப்பு மதிப்பு: 1) ஒரு தொழிலில் ஒரு நிறுவனம் தொடராது என்று கருதப்படும் சொத்தின் மதிப்பு. இதன் அடிப்படையில் அதன் சொத்துகள் அல்லது. இருப்புகள் சில்லரையாக விற்கப்படும். 2) ஒரு நிறுமத்-