பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

brid

21

bull



தில் ஒரு பங்குக்குரிய இருப்பின் மதிப்பு

bridging loan – இடைவெளிக் கடன்: குறுகிய காலக்கடன். ஓர் இருப்பை வாங்குவதற்கும் மற்றொன்றை விற்பதற்கும் இடையிலுள்ள வெளியைச் சரிக்கட்ட வாங்கப்படும் கடன்

broker - தரகர்: இருவரை ஒன்று சேர்த்து ஓர் ஒப்பந்தத்தை முடிக்கும் முகவர். இவர் வாணிபத்தின் ஓர் இன்றியமையாப் பகுதி. இவர்கள் பல வகைப்படுவர்

brokerage - தரகு: தரகர் தான் செய்யும் பணிக்குப் பெறும் சிறு ஊதியம் ஒப்பந்தத் தொகையில் விழுக்காடாகப் பெறுவது. இது கழிவே

brown goods – செஞ்சரக்குகள்: தொலைக் காட்சி முதலியவை. இவை மரப்பெட்டிகளில் வைக்கப்படுபவை ஒ. white goods

brought down – கீழ்க் கொண்டவரப்பட்ட: கீகொ

brought forward — முன்பக்கம் படி : முப

budget- வரவு செலவுத் திட்டம்: ஒரு நிறுவனத்தின் நிதிவளத் திட்டம். வரவினங்களுக்கும் செலவினங்களுக்கும் இலக்குகள் அமைப்பது. இது உபரி வரவு செலவுத் திட்டம், பற்றாக்குறைச் செலவுத்திட்டம் என இருவகை

buffer stock – தாங்குமிருப்பு: கூடுதல் இருப்பு: ஒரு பண்டத்தின் விலையை நிலைப்படுத்த அரசு அல்லது ஒரு வகை நிறுவனம் சேமித்து வைத்திருக்கும் இருப்பு. உபரி இருப்பு. காப்பிருப்பு என்றும் கூறலாம்

bulk carrier – பருமற்றி: தொகுதியாகச் சரக்கை ஏற்றிச் செல்லும் கப்பல்

bull - காளை விலை ஏற்றுத் தரகர்: பங்குச் சந்தையில் விலை ஏற்றத்தை விரும்புபவர் ஒ bear

bull market — காளை சந்தை: விலை ஏற்றமுள்ள சந்தை. இதில் வாங்குதலே விரும்பப்படுவது

bullet - ஈற்றீடு: 1) நிலையான வட்டியளித்துக் குறிப்பிட்ட தேதியில் முதிர்ச்சியடையும் ஈடு

2) கடனின் இறுதிச் செலுத்தீடு. இது கடன் வாங்கிய முழுத் தொகையுமாகும்

bullet loan — ஈற்றீட்டு கடன்: இதில் இடைமீள் செலுத்தீடுகள் வட்டி மட்டுமே. அசல் தொகை இறுதியில் கொடுக்கப்படுவது

bullion - உலோகப்பாளம்: பொன், வெள்ளி முதலிய விலை உயர்ந்த உலோகங்கள் பாளங்களாக இருத்தல்