பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

call

23

сарі


ஒரு நிறுமம் தன் பங்குதாரர்களுக்கு விடுக்கும் கோரிக்கை

பா. Share capital.

call bird-அழைப்புப் பறவை:பொதுமக்கள் தம் கடைக்கு வருமாறு ஊக்குவிக்கச் சில்லரை வணிகர்கள் கொடுக்கும் குறைந்த விலை பொருள். இதனால் உயர்ந்த விலைபொருள்களை அவர்கள் வாங்குவர் என்பது வணிகர்களின் நம்பிக்கை

call in advance–பங்கழைப்பு முன்பணம்:கைம்முதல் அழியா முன் பணம்

calls in arrears–அழைப்பு நிலுவை.

call letter–அழைப்புச் சீட்டு.

call loan–அழைப்புக் கடன்:நாள் நிலுவைக் கடன்

call money–அழைப்புப் பணம்:பணச் சந்தையில் போடும் பணம். குறுகிய கால அறிவிப்பின் பேரில் அதை எடுத்துக் கொள்ளலாம்

call option–அழைப்புரிமை:அழைப்புத் தேர்வு பா. option.

Call rates-அழைப்பு வீதங்கள்.

calls on shares–பங்கழைப்பு.அழைப்புமூலம் பங்கு ஒரு நிறுமத்திற்குப் பெறப்படுவது

called up capital–அழைப்பு முதல்:வருவித்த மூலதனம் பா. share capital.

callers-அழைப்பவர்கள்.

campaigin-இயக்கம்:முறையாக அமைந்த செயல். கவனமாகத் திட்டமிட்டு உரிய குறிக்கோள்களை அடைதல். பொதுவாக,இது விளம்பரம், விற்பனை,பொதுத் தொடர்புகள்,சந்தை வாணிபம் முதலியவற்றில் அமையும்

capacity cost–கொள்திறன் ஆக்கச்செலவு.

capital-முதல்: 1) பொறுப்பை நீக்க,ஒருவரின் சொத்துகளின் மொத்த மதிப்பு 2) ஒரு நிறுவன இருப்புகளில் உரிமையாளர்களின் நலங்கள் அளவு. இவற்றிலிருந்து பொறுப்புகளை நீக்க வேண்டும் 3) ஒரு நிறுவனம் இயங்க உரிமையாளர்கள் வழங்கும் பணம் 4) பொருளாதாரக் கொள்கையில் உற்பத்திக் காரணி. வழக்கமாக இது எந்திரமும் நிலையமும் ஆகும். அல்லது பணமாகவும் இருக்கலாம்

capital account-முதலினக் கணக்கு: 1) மூலதனக் கணக்கு. நிலம், கட்டிடம்,எந்திரம் முதலியவற்றிற்காகும் முதல் செலவினத்தைப் பதியும் கணக்கு 2) பெரும் இனங்களுக்குச் செலவிடப்படுந் தொகை 3) ஒரு தொழிலிலுள்ள நிகர இருப்புகளில்,முழு வணிகரின் நலத்தைக் காட்டும் கணக்கு 4) பங்கு நிறு