பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

capi

24

capital receipts


வனத்தின் நிகர இருப்புகளில் பங்காளர்களின் நலங்களைப் பதிவு செய்யும் தொடர்கணக்குகள். பொதுவாக, முதலினக் கணக்குகள் முதலில் செலுத்தப்படும் தொகைகளையும் நடப்புக் கணக்குகளையும் உள்ளடக்குபவை

capital allowances - முதலினப்படிகள் : இவை வருமான வரி விலக்குகளும் சில ஆதாயங்களுமாகும். தொழிலுக்குரிய சில இருப்பு வகைகளின் தேய்மானத்தைப் பிரதிபலிப்பவை

capital assets – முதலின இருப்பு : நிலையிருப்பு எ-டு. நிலம், கட்டடம், எந்திரம்.

capital authorised – அனுமதிக்கப்பட்ட முதல் : நிறுமம் ஒன்று திரட்டக் கூடிய உயர்ந்த அளவு முதல் தொகை. வேறுபெயர்கள். பெயரளவு முதல், பதிவு செய்யப்பட்ட முதல்

capital duty – மூலதன வரி : நிறுமம் தோற்றுவிக்கப்படும் பொழுது செலுத்தப்படுவது

capital efficiency – முதலினத் திறன் : முதலீட்டுத் திறன்

capital employed — பயன்படு முதல் : இயல்பு இலாபம் காணப்பயன்படுவது. இம்முதலைக் காணச் சொத்துகளிலிருந்து பிறருக்குத் தர வேண்டிய பொறுப்புகளைக் கழிக்க வேண்டும்

capital expenditure - முதலினச் செலவு : நிலம், கட்டிடம், எந்திரம், முதலீடுகள், அறைகலன் முதலிய சொத்துகளைப் பெற்றுத் தரும் செலவினம்

capitalformation– முதலாக்கம் : முதல் தோற்றுவிக்கப்படுதல்

capital gain - முதல் ஆதாயம் : இருப்பில் பெறப்படும் ஆதாயம். இதற்கு வரிவிதிப்புண்டு

capital goods - முதலினப் பொருள்கள் : உற்பத்திப் பொருள்கள் எ-டு. எந்திரம், நிலம், கச்சாப் பொருள்கள்

capital investment – மூலதன முதலீடு : பா. investment

capital issued – வெளியீட்டு முதல் : வழங்கப்பட்ட முதல். அமைக்கபட்பட்ட முதலின் ஒரு பகுதி. பொது மக்கள் வாங்குவதற்காக வெளியிடப்படுவது

capital, paid-up - செலுத்து முதல் : அழைப்பு முதல் தொகையில் பங்குதாரர்கள் உண்மையாகச் செலுத்தும் தொகை

capital profit – முதல் ஆதாயம் : முதல் இருப்பை விற்பதால் வரும் இலாபம். வரிக்குட்பட்டது

capital receipts – மூலதன வரவுகள் : கடன் பணம், நிலச்