பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

capi

25

cargo


Cарі — சொத்து விற்பனைத் தொகை,பங்குகள் விற்பனைப் பணம் முதலியவை

capital redemption reserveமுதல் மீட்புக் காப்பு நிதி: இது காப்பு நிதியாகும்

capital reductionமுதலினக் குறைப்பு:செலுத்தப்பட்ட பங்கு முதலைக் குறைத்துக் காட்டுதல்

capital reserves – முதல் காப்பிருப்புகள்:பல காரணங்களினால் ஒரு நிறுமத்தின் பகிர்ந்து அளிக்கப்படாத ஆதாயங்கள்

capital resource முதலின வளம்:மூலதனச் செழுமை. ஒரு நிறுவனத்தின் அச்சாணி

capital share – பங்கு முதல்:பங்குகளால் அளிக்கப்படுவது

capital subscribed – ஒப்பிய முதல்: வெளியீட்டு முதல் தொகையில் பொதுமக்கள் வாங்க ஒப்புக் கொள்ளும் தொகை

capital turn over - முதல் விற்று முதல்: மூலதன விற்று முதல்

capital tax – மூலதன வரி

capital, uncalled - அழையா முதல்: ஒப்பிய முதலுக்கும் அழைப்பு முதலுக்குமுள்ள வேறுபாடு

capital, unpaid – செலுத்தா முதல்: அழைப்பு முதல் தொகையில் செலுத்தப்பெறாத இருப்பு வ-3. வேறுபெயர்: அழைப்பு நிலுவை

capitalization - முதலாக்கம்: 1) ஒரு நிறுமத்திற்கு முதல் வழங்கும் செயல் 2) ஒரு நிறுமத்தின் முதல் கட்டமைப்பு 3) ஒருநிறுமத்தின் காப்பிருப்புகளைப் பங்குச் சான்று வழங்கல் மூலம் மூலதனமாக்கல்

captive market – ஆட்கொள் அங்காடி: மாற்று விளை பொருள் இல்லாததால், ஒரு குறிப்பிட்ட விளைபொருளையே வாங்கும் சூழ்நிலையுள்ள சந்தை

Cargo - சரக்கு: கப்பல் வழியும் வான வழியும் கொண்டு செல்லப்படும் பொருள்

cargo insurance – கப்பல் சரக்குக் காப்புறுதி: ஒரு கப்பல் ஏற்றிச் செல்லும் சரக்குகளுக் குரிய காப்பீடு

carriage - வண்டிச் செலவு: சரக்குகளை உரியவரிடத்துச் சேர்க்கும் ஊர்திச் செலவு

cargo down – கீழ்கொண்டு செல்லல்: மேலிருந்து கீழ்க் கொண்டு வருதல்

cargo forward – செலுத்து வண்டிச் செலவு: சரக்குகளைச் சேர்ப்பிக்கும் செலவை வாங்குபவர் கொடுத்தல் Topay என்று குறிக்கப்பெறுவது