பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

cargo

26

cash


cargo free - செலுத்தப்பட்ட வண்டிச் செலவு: சரக்குகளைச் சேர்ப்பிக்கும் செலவை விற்பவரே கொடுத்தல். paid என்று குறிப்பிடப்பட்டிருக்கும்

cargo inwards – உள் வண்டிச்செலவு

cargo outwards – வெளி வண்டிச்செலவு

carrier - ஊர்தி, ஊர்தியாளர்: சரக்குகளை ஏற்றிச் செல்லும் வண்டி அல்லது வண்டி உரிமையாளர்

cartage- வண்டிச் சத்தம்: சரக்குகளை வண்டி மூலம் ஏற்றி வருவதற்குக் கொடுக்கும் கட்டணம்

cartel - கூட்டியம்: கூட்டமைப்பு. தனிப்பட்ட நிறுமங்கள் சேர்ந்த அமைப்பு

cash - பணம்: நாணயங்களாகவும் தாள் பணமாகவும் உள்ள செலாவணி. கடன்கள் தீர்க்க எளிதாகப் பயன்படுவது

cash against document – ஆவணத்திற்கெதிராகப் பணம், ஆஎப: ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்குரிய செலுத்து நிபந்தனைகள். இறக்குமதி செய்பவர் பணம் செலுத்தி இவ்வுண்டியலைப் பெற்றுக் கப்பல் சரக்குகளை எடுத்துக்கொள்வர்

cash book - பண ஏடு: உள்வருவதும் வெளிச் செல்வதும் பதியப்படும் புத்தகம்

cash book, features of — பணஏட்டின் இயல்புகள்: 1) துணை ஏடுகளுள் ஒன்று 2) ஒரு முதன்மைப் பதிவேடு 3) ஓர் இறுதிப் பதிவேடு 4) கணக்கு போன்றே கோடிடப்படுவது 5) பேரேட்டுக் கணக்குமாகும்

cash book, kinds of- பண ஏட்டின் வகைகள்: 1) தனிபத்திப் பண ஏடு 2) இரட்டைப் பத்திப்பண ஏடு 3) முப்பத்திப் பண ஏடு

cash cow - பண காமதேன் நன்கு புகழ்பெற்ற வாணிபப் பொருள் எ-டு. ஆர்லிக்ஸ்

cash credit — பண கடன்: பணமாகப் பெறும் கடன்

cash crop — பணப்பயிர்: உழவர் தன் பயன்பாட்டுக்கும் விற்பனைக்கும் உண்டாக்குவது எ-டு. கடலை

cash deal - பண வரவு செலவு: வாங்குவதிலும் விற்பதிலும் பணம் பெறப்படுவது

cash discount – பண வட்டம்: 1) தவறாமல் தன்னிடம் பணம் செலுத்தி வாங்குபவருக்கு, விற்பனையாளர் விலையைத் குறைத்துக் கொடுத்தல் 2) மொத்த விற்பனையாளரிடமிருந்து சில்லரை விற்பனையாளர் வாங்கும் பொழுது, சரக்குகளின் விலைகள் குறைத்துக் கொடுக்கப்படுதல்