பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

cash

27

chain


cash management account – பணமேலாண்மைக் கணக்கு: வழக்கமாகப் பண அங்காடியில் ஒரு வங்கி தன் வைப்பு நிதிகளை முதலீடு செய்யுங்கணக்கு. இது ஒரு காசோலைக் கணக்கு

cash in transit — வழியிடை பணம்: சரிக்கட்டுப் பதிவிற்குரியது

cash on delivery-பணகொடுபாடு ப.கொ: பணம் கட்டிஎடுப்பதற்குரிய சரக்கு அனுப்பீடு

cash on hand – பணக்கையிருப்பு: ஒவ்வொரு நாளும் எழுதும் கணக்கிலும் ஐந்தொகையிலும் காட்டப்படுவது

cash price – பண விலை: பொருள் விலைக்கு உடன் பணம் கொடுத்து வாங்குதல்

cash sales – பணவிற்பனை: சரக்குகளைப் பணத்திற்கு மட்டும் விற்றுப் பெறுந்தொகை

cashier - காசாளர்: காசைக் கொடுத்து வாங்குபவர். பொதுவாக, இது வங்கிக்காசாளரையே குறிக்கும்

central bank- மையவங்கி: இது கூட்டுறவு அடிப்படையிலும் நாட்டு அடிப்படையிலும் இந்தியாவில் உள்ளது

certificate of damage-சேதார சான்று: ஒரு சரக்கு கொடுபடும் நிலையில் இருக்கும் பொழுது, சிதைந்திருப்பின் அதற்குக் கப்பல் துறையினர் வழங்கும் சான்று

certificate of deposit— வைப்பு நிதிச் சான்று: வாடிக்கையாளரிடமிருந்து பெறும் கால வைப்பு நிதிக்குச் செலாவணியுள்ள சான்றிதழை வங்கி வழங்கும். கால அளவு குறைந்து 5 ஆண்டுகள்

certificate of Incorporation — கூட்டுப்பதிவுச் சான்று: ஒரு நிறுவனம் உருவாகும் பொழுது, அதன் பங்குதாரர்களுக்கு நிறுமப் பதிவாளர் வழங்கும் சான்றிதழ்

certificate of insurance — காப்புறுதிச்சான்று: காப்புறுதி முறிக்கு அளிக்கும் சுருக்கமான தகவல்கள் கொண்ட சான்றிதழ்

certificate of posting – அஞ்சல் சான்று: ஒரு கடிதத்தை அஞ்சலில் சேர்த்ததற்கு அஞ்சல் அலுவலகம் வழங்கும் சான்றிதழ்

certified accountant – சான்று பெற்ற கணக்கர்: சான்று பெற்ற கணக்கர் கழக உறுப்பினர்

certified stock – சான்றிட்ட இருப்பு: இருப்புகளை ஆராய்ந்து, கொடுப்பதற்கு ஏற்றவை என்று சான்றிடல்

chain stores – வாணிப வளாகம்: பல அங்காடிகள் அமைந்தது