பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

chair

28

cheque


chairman — தலைவர்: ஒரு நிறுமத்தின் மிக மூத்த அலுவலர். நிறுமக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குபவர்

chairman's report – தலைவர் அறிக்கை: நிறுமத்தின் ஆண்டு அறிக்கையோடு சேர்க்கப்படுவது. நிறுமத்தில் ஓராண்டு நடந்த செயல்களையம் எதிர் காலத்திட்டத்தையும் இது குறிக்கும். தலைவரால் ஆண்டுக் கூட்டத்தில் படிக்கப்படுவது

chamber of commerce — வாணிபக் கழகம்: தொண்டு நிறுவனம். தொழில் நகரங்களில் அமைந்து பணியாற்றுவது. தொழில் வளர்ச்சியில் நாட்டமுள்ளது

charge - பொறுப்பு: 1) கடன் பொறுப்பு 2) கூலிப் பொறுப்பு 3) வரி அல்லது கட்டணம்

charges – செலவுகள்: செலவினங்கள்

charges, establishment – நிறுவனச்செலவுகள்: பணிநிலையச் செலவுகள்

charges, incidental-தற்செயல் செலவுகள்: இடைநிகழ் செலவுகள்

charge account — கடன் கணக்கு: பற்று வரவுக் கணக்கு. வணிக அங்காடிகளில் வைத்துக்கொள்ளப்படுவது

charges forward – செலுத்து செலவுகள்: சரக்கு அனுப்பீட்டிற்குரிய வண்டிச் செலவுகள் எல்லாம் பெறுபவரால் கொடுக்கப்பட வேண்டும் என்னும் அறிவிப்பு

charges register – 1) செலவு பதிவேடு 2)கடன் பொறுப்புப் பதிவேடு

chartered accountant- பட்டயக் கணக்கர்: நிறுமங்களின் கணக்குகளைத் தணிக்கை செய்யத் தகுதி பெற்றவர்

charter - கல வாடகை எடுப்பு: கப்பல் அல்லது வானூர்தியை வாடகைக்குப் பேசி எடுத்துப்பயன்படுத்துதல்

charterer — கல வாடைகையாளர்: கப்பலை வாடகைக்கு எடுப்பவர்

cheque- காசோலை: ஒரு வங்கி தன்னிடம் கணக்கு வைத்திருப்பவருக்கு அளிக்கும் அச்சிட்ட தாள். இது நடப்புக் கணக்குக் காசோலை, சேமிப்புக் கணக்குக் காசோலை என இருவகை. பண நடவடிக்கைளுக்குப் பயன்படுவது

cheque, bearer – கொணர்னர் காசோலை: இதில் பெறுபவர் பெயர் எழுதப் பெறும். இதை வங்கியில் செலுத்தி அவர் பணம் பெறலாம்

cheque, blank – வெறும் காசோலை: பெறுபவருக்குத் தொகை குறிக்காமல் தரப்படுவது. தொகை தெரியாததே