பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

com

31

com


தோற்றம் ஆகியவற்றை நெறிப்படுத்தும் விதிகள் கொண்டது இவை சட்ட அடிப்படையில் அமைந்தவை. முதன்மையான சட்டங்களாவன: 1) நிறுமச் சட்டம் 2) நொடிப்புச் சட்டம் 3) நிதியப் பணிச் சட்டம்.

company, limited- வரையறை நிறுமம்: பொறுப்புகள் வரையறை உடையவை. இதனால் நிறுமக்கடனுக்குரிய இதன் உறுப்பினர்களின் பொறுப்பு வரம்புடையது.

company, private - தனியார் நிறுமம்: பொது நிறுமம் அன்று. ஆனால் பதிவு செய்யப்பட்டது. இதன் பங்குகளைப் பொது மக்களுக்கு விற்க முடியாது. சட்டத் தேவைகள் அவ்வளவு. கடுமையானவை அல்ல. குறைந்த அளவு. செலுத்து முதல் தேவையும் இதற்கில்லை . முழுக் கணக்குகளையும் இது அளிக்கத் தேவை இல்லை.

company, public limited - வரையறையுள்ள பொது நிறுமம்: குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட பங்கு முதலை இது கொண்டது. பொது மக்களுக்குப் பங்குகளையம் ஈடுகளையும் வழங்குவது. நிறுமச் சட்டப் படி தோற்றுவிக்கப்படுவது,

company, registered - பதிவு செய்யப்பட்ட நிறுமம்: நிறுமச் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது பொது வகை நிறுமம் இதுவே. ஒரு நிறுமம் பொது நிறுமமாகவோ தனியார் நிறும மாகவோ பதிவு செய்யப்படலாம்.

company seal - நிறும முத்திரை: நிறுமப் பெயர் பொறித்த முத்திரை, நிறுமம் வழங்கும் ஆவணங்களில் தவறாது இது போடப்படும்.

company secretary - நிறுமச் செயலர்: நிறும அலுவலர். இயக்குநர்களால் அமர்த்தப்படுபவர். நிறும ஆட்சிச் சார்பான அலுவல்கள் அனைத்தையும் செய்பவர். சில தகுதிகள் உள்ளவர்.

company, statutory - சட்டவழி நிறுமம்: நாடாளுமன்றத் தனிச்சட்டத்தின் மூலம் நிறுவப் படுவது. இதன் உரிமைகளும் அதிகாரங்களும் தனிச்சட்டத் திற்குட்பட்டது, எ-டு. வாழ்நாள் காப்பீட்டுக்கழகம், - தொழில் முதலீட்டுக் கழகம்,

company, unlimited - வரை யறையற்ற நிறுமம்: இதில் இதன் உறுப்பினர்களின் பொறுப்பு எவ்வழியிலும் வரையறுக்கப்பட்டதன்று. இது பல வகை.

compensating error - ஈடுசெய் பிழை: சில சமயம் ஒருகணக்கில் பிழை ஏற்பட, அதே தொகை அளவிற்கு வேறொரு கணக்கிலும் பிழை ஏற்படுதல்.