பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

con

35

cost


converslon method - மாற்று முறை: ஒற்றைப் பதிவினை இரட்டைப்பதிவுக்கு - மாற்றல். இது கணக்குவைப்பு முறையில் செய்யப்படுவது.

cooperation - கூட்டுறவு: கூட்டுறவே நாட்டுயர்வு 2) 'ஒத்துழைப்பு.

cooperative -- கூட்டுறவுச் சங்கம்: ஒரு வணிக நிறுவனம். கூட்டுறவு அடிப்படையில் அமைந்தது. தொழில்கள் மிகுந்துள்ள இடங்களில் அதிகமிருப்பது. வகை பல.

cooperative bank - கூட்டுறவு வங்கி: கூட்டுறவு அடிப்படையில் நடைபெறுவது. இவ்வங்கிகள் நம் நாட்டில் நிறைய உள்ளன. இதற்குத் தலைமையானது மையக் கூட்டுறவு வங்கி,

cooperative stores கூட்டுறவுப் பண்டகசாலை: பொது மக்களுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் அமைந்து பயன் விளைவிப்பவை.

cooperative societies, types of - கூட்டுறவுச் சங்க வகைகள்: இவற்றின் முக்கிய வகைகள் 1) கூட்டுறவு நாணயச்சங்கங்கள் 2) நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்கள் 3) கூட்டுறவுச் சந்தையிடுகைச் சங்கங்கள் 4) உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் 5) கூட்டுறவு வீட்டு வசதிச் சங்கங்கள்.

copartnership shares - இணை கூட்டாளிப் பங்குகள்.

coproducts - இணை விளை பொருள்கள்: இணை உற்பத்திப் பொருள்கள்.

corporate Image - கூட்டு மாண்பு: ஒரு நிறும மதிப்பின் உயர்வு, இது அது தன் பணியாளர்களை நடத்தும் பாங்கும் நல்ல சூழலை உருவாக்கும் நிலையுமாகும். அதன் விற்பனைக்கு இது மிக இன்றியமையாதது.

corporate plan - கூட்டுத்திட்டம்: தொழில் வளர்ச்சித் திட்டம்.

corporation - கழகம்: பலர் சேர்ந்த கூட்டமைப்பு, பொதுவாக, அரசு சார்ந்ததாக இருக் கும். எ-டு, சேரன் போக்குவரத்துக் கழகம், வாழ்நாள் காப்பீட்டுக்கழகம்.

corporation tax - கூட்டுவரி: நிறுமங்கள், நிறுவனங்கள் ஈட்டும் ஆதாயங்களுக்கு விதிக்கப்படும் வரி,

cost - ஆக்கச் செலவு: அட்க்கச் செலவு. 1. ஒரு பொருளை வாங்கக் கொடுக்கும் பணம். 2. ஒரு குறிக்கோளை அடையச் செலவிடும் பணம். எ-டு. சில பொருள்களை உற்பத்தி செய்தல், தொழிற் சாலை அமைத்தல்.