பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

cost

37

count


உய்மானங்களைக் கொண்டு ஒவ்வொரு வெளிப்பாட்டுக்குரிய உட்பாடுகளின் தனியாக்கச் செலவுச் சேர்க்கைகளை ஆக்கச்செலவு சார்பலனிலிருந்து பெறலாம்.

cost ledger control accounts - ஆக்கச் செலவுப் பேரேட்டுக் கட்டுபாட்டுக் கணக்குகள்: அடக்க ஏடு கட்டுமானக் கணக்கு.

cost minimizatlon - ஆக்கச் செலவுச்சிறுமம்: ஒரு தனியாள் அல்லது நிறுவனம் குறைந்த விலையில் சரக்குகளை வாங்குதல், இலாபமீட்ட சிறந்த வழி. பா. profit maximization.

cost of sales - விற்பனைச்செலவு.

cost plus - ஆக்கச் செலவு கூட்டல்: 1. ஒப்பந்த நிபந்தனைகள். இவற்றில் உற்பத்தியாளர் சரக்குகளை, அடக்கச் செலவுக் கூடுதலாகத்தர ஒப்புக் கொள்ளுதல். இதற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட கட்டணத்தைப் பெறுதல் 2. ஒரு வேலை ஆகும் செலவைக் கணக்கிடுவதால் குறிப்பிட்ட விழுக்காட்டைச் சேர்த்தல்.

cost premium bonus - ஆக்கச்செலவு முனைம ஊக்க ஊதியம்: அடக்கமிகை மதிப்பு ஊக்கத்தொகை.

cost reduction - ஆக்கச் செலவுக் குறைப்பு: அடக்கச் செலவைக் குறைத்தல். cost reports - ஆக்கச் செலவு அறிக்கைகள்: அடக்க அறிக்கைகள்,

cost standards - ஆக்கச் செலவுத்தரம்: உற்பத்திச் செலவு மதிப்பீடு.

cost unit - ஆக்கச் செலவு அலகு: ஓர் இனத்தை உண்டாக்க ஆகும் செலவு.

cost varlance - ஆக்கச் செலவு மாறுபாடு: அடக்க முரண்பாடு,

cost of capital - முதலீட்டு ஆக்கச் செலவு: முதலின அடக்கச் செலவு.

cost of production - உற்பத்திச் செலவு: ஒரு பொருளை ஆக்குவதற்குரிய செலவினம்.

counterbld - எதிர்க்கேள்வி: ஏலத்தில் ஒரு கேள்விக்கு மாற்றுக்கேள்வி.

counter foll - அடிக்கட்டை : வரவுச் சீட்டுகளின் அடிப்பகுதி, வைத்திருப்பவரிடம் நிலையாக இருப்பது,

counteroffer - எதிர்விலைக் குறிப்பீடு: ஏலத்தில் விற்பனையாளர் தம் பொருளுக்குக் கேட்கப்படும் குறைவான விலைக்கு மேல் ஒரு விலை கூறல்.