Counter
38
credit
counter manding of cheque - காசோலை மறுப்பாணை இடுதல்: காசோலைத்தடை ஆணை வழங்குதல்,
counter sign - எதிர் ஒப்பம்:கூடுதல் ஒப்பம். ஆவணங்களில் இடப்பெறுவது.
countervailing duty - ஈடு செய்வரி: கூடுதல் இறக்குமதி வரி.
coupon - சீட்டு: 1. ஒரு பத்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நாளிடப்பட்ட துண்டுகளில் ஒன்று. வட்டி அல்லது பங்காதாயம் பெறப் பயன்படுவது. 2. குறிப்பிட்ட - வட்டிவீதம் அளிக்கும் பத்திரம். எ-டு. 5% சீட்டு என்பது. 5% வட்டி யளிப்பது.
covenant - உடன்படிக்கை : ஒப்பந்தப் பத்திரம் இறுதிநாள் உறுதிமொழி. எ-டு. நில உடன் படிக்கை .
cover - ஈடு: குறிப்பிட்ட இடருக்கு எதிராக வாழ்நாள் காப்புறுதி வழங்கப்படுதல். எ-டு. பங்காதய ஈடு:
cover note - சான்றுறுதி: முதன்மைக் காப்புறுதிமுறி ஆவணங்கள் வழங்கப்படும் முன், கொடுக்கப்படும் தற்கால மெய்ப்பு.
crash - வீழ்ச்சி: சந்தையில் விலை சட்டென்று குறைதல்.
credit - 1. மதிப்பு : ஒருவர் அல்லது ஒரு நிறுவனத்தின் நிதிநிலைச் சிறப்பு: 2. வரவு: வாங்கும் பொருளுக்குக் கொடுக்கும் பணம். 3. கடன்: வங்கியிலிருந்து வாங்கும் பற்றுத் தொகை.
credit account- கடன் கணக்கு : பற்றுக் கணக்கு.
credit balance - வரவு இருப்பு.
credit control - கடன் கட்டுப்பாடு.
credit facillty - கடன் வசதி: வங்கியில் கடன் வாங்குதல்.
credit note - வரவுக் குறிப்பு: அனுப்பிய சரக்குகளில் விற்காதவை அனுப்பியவருக்குத் திருப்பப்படும் பொழுது, அதற்காக அனுப்பியவர் விற்பவருக்குக் கொடுக்கும் குறிப்பு. வணிக நடவடிக்கைகளில் ஒன்று .
creditor - கடன் ஈந்தோர்: ஒரு தனியாள் அல்லது நிறுவனத்திற்கு ஒருவர் கடன் உறுதியின் பேரில் கடன் தொகை அளித்தல்.
creditor ledger adjustment account - கடன் ஈந்தோர் பேரேட்டுச் சரிகட்டுக் கணக்கு: பொதுப் பேரேட்டில் உள்ளது.
credit sale- agreement - கடன் விற்பனை உடன்பாடு: ஒரு பொருளைக் கடனுக்காக வாங்கும் பொழுது செய்து கொள்ளும் ஒப்பந்தம்.