பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

credit

39

Current


creditsqueeze - பணமுடக்கம்: பணம் வழங்குதலை வரயறை செய்து பொருளாதாரச் செயலைக் குறைக்க அரசு எடுக்கும் நடவடிக்கை . credit worthiness- கடன் தகைமை: கடன் அடைக்குந்திறன்.

cross holding - நிறுமங்களுக்கிடைப் பிடிப்பு: நிறுமங்களுக்கிடையே பங்கைப் பிடித்து வைத்தல்.

crossed cheque - கீறிய கா சோலை: பாதுகாப்புக்காக இரு கோடிடப்படும் காசோலை. இதைக் கணக்கில் போட்டே பணம் எடுக்கமுடியும்.

crossing - கீறல்: காசோலை கீறும் முறை. இது பலவகை.

cross reference - குறுக்குக் குறிப்பு: எதிர்க்குறிப்பு. -

cum dividend- இலாப ஈவுகள்.

cum interest - வட்டி ஈவுள்ள .

cumulative preference shares - குவி முன்னுரிமைப் பங்குகள்: ஒருவகை முன்னுரிமைப் பங்குகள். இவற்றில் முந்திய ஆண்டுகளில் கொடுக்கப்படாத பங்காதாயங்களையும் பெற உரிமை உண்டு.

currency - செலாவணி, நாணயம்: 1. பொருளியலில் பழக்கத்திலுள்ள பணம். இது எவ்வகையிலும் இருக்கலாம். 2. பண்டம் மாற்றுவதற்குரிய கருவி: தாள்பணம், காசோலை, வரைவோலை. 3. ஒரு நாட்டிலுள்ள குறிப்பிட்ட வகைச் செலவணிப் பணம், டாலர் - அமெரிக்கா. பவுன் - இங்கிலாந்து. ரூபாய் இந்தியா, 4. மாற்றுண்டியல் முதிர்ச்சி அடையுமுன் கழியுங்காலம்.

current account - நடப்புக் கணக்கு: வங்கியில் ஒருவர் நாள்தோறும் பயன்படுத்தும் வினைமிகு கணக்கு. காசோலை மூலம் பணம் போடலாம்; பணம் எடுக்கலாம்; பணம் பிறருக்குக் கொடுக்கலாம். செலுத்து சீட்டுகள் மூலம் போடலாம். இக்கணக்கில் குறைந்த அளவு இருக்க வேண்டிய தொகை ரூ.500. ஒ. savings account.

current assets - நடப்பு இருப்புகள்: ஒரு தொழிலில் சுழல் முதலின் பகுதியாக உள்ள சொத்துகள், வாணிபத்தில் மாற்றப்படக்கூடியவை. எ-டு. கடனாளிகள், பணம், பங்குச் சந்தை . ஒ.

capital asset. current liabilities - நடப்புப் பொறுப்புகள்: ஒரு நிறுவனத் தின் கடன் ஈந்தவர்களுக்குரிய தொகைகள். குறிப்பிட்ட காலத் தில் செலுத்தப்படவேண்டி யவை.