பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

debit

41

defe



debit note -பற்று குறிப்பு: வரவேண்டிய பணத்திற்கு ஒரு நிறுவனம் ஒருவருவருக்கு அனுப்பும் ஆவணம். இதற்கு மாற்று இடாப்பு ஆகும். ஒ. credit note

debtor - கடனாளி: கடனைப் பெற்றவர். அல்லது தான் கடனாகப் பெற்ற தொகையை ஒருவருக்குக் கொடுக்க வேண்டியவர்

debtor ledger adjustment account - கடனாளிப் பேரேட்டுச் சரிக்கட்டுக் கணக்கு

decision-making — முடிவு எடுத்தல்: ஒரு நிறுவனத்தில் வகுக்கப்பட்டுள்ள கொள்கையைச் செயற்படுத்த மேற்கொள்ளும் முடிவு. ஒரு நிறுவன மேம்பாட்டிற்கு இது மிக இன்றியமையாதது. இது அரசுக்கும் பொருந்தும்

deed - ஆவணம்: பத்திரம்.

deed of partnership — கூட்டாண்மை ஒப்பந்த ஆவணம்: ஒரு வாணிபம் நடத்தப் பங்காளர்கள் செய்து கொள்ளும் உடன்படிக்கை

default interest – தவறுதல் வட்டி: தவணை தவறுவதற்காகச் செலுத்தப்படும் வட்டி

deferred annuity – பின்னுரிமை ஆண்டுத் தொகை: காப்புறுதி முறியாளர் குறிப்பிட்ட வயதுக்கு வரும்பொழுது செலுத்தப்படுந்தொகை

deferred asset – பின்னுரிமை இருப்பு: பின்னால் பெறப்படும் சொத்து

deferred liability – பின்னுரிமை பொறுப்பு: பின்னால் வாய்ப்பு தரும் பொறுப்பு

deferred ordinary share – பின்னுரிமைப் பொதுப்பங்கு: பங்காதாயம் குறைவாகவுள்ள பங்கு

deferred payment-agreement - செலுத்து பின்னுரிமை உடன்பாடு: செலுத்துதல் பின்னால் அமைந்திருப்பது

deferred rebate — பின்னுரிமை தள்ளுபடி: பொருள் வழங்கிய பின், வாடிக்கையாளருக்கு அவ்வப்பொழுது வழங்கும் தள்ளுபடி. வாடிக்கையாளரின் தொடர்ந்த ஆதரவு இருக்கும் நிலையில், இது அளிக்கப்படுவது.

deferred revenue expenditure - பின்னுரிமை வருவாயினச் செலவு: செலவு செய்த ஆண்டுக்கு மட்டுமின்றி, அடுத்து வரும் ஆண்டுகளுக்கும் தொடர்ந்து பயனளிக்கும் செலவுகள்

deferred shares – பின்னுரிமைைப் பங்குகள்: நலங்கள் பின்னால் கிடைக்கும் பங்குகள்