பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

depo

43

direct


வாங்குவதற்காக ஒரு நிறுவனத் திடம் அளிக்கும் தொகை. விற்பனைத் தொகையின் ஒரு பகுதி இது. 2) வட்டிக்காக வங்கியில் செலுத்தப்படுந் தொகை 3) தவணை முறை வாங்குகையில் முதல் தவணை யாகச் செலுத்தப்படுவது. இடு நிதி, இடுதொகை என்றுங் கூறலாம்.

deposit account – வைப்பு நிதிக் கணக்கு: காசோலை மூலம் எடுக்க இயலாத வங்கிக் கணக்கு. வட்டி மட்டும் வாங்கிக் கொள்ளலாம்.

deposit bonds — வைப்பு நிதி ஆவணங்கள்: தேசியச் சேமிப் புப் பத்திரங்கள். பல ஊக்குவிப் புகள் கொண்டவை.

depreciation – தேய்மானம்: அழிவு தேய்வினால் ஏற்படும் ஓர் இருப்பின் மதிப்புக் குறை வைக் காட்ட ஒரு நிறுவனத்தின் இலாப-நட்டக் கணக்கில் ஒதுக் கப்படும் தொகை. இருப்பு என்பது கட்டடம் முதலிய அசையாச் சொத்துகளாகவோ எந்திரம் முதலிய அசையுஞ் சொத்துகளாகவோ இருக்க லாம். முன்னதற்குத் தேய்மான விழுக்காடு குறைவு. 2% பின்னதற்கு 40%. ஒ. appreciation.

depreciation reserve – தேய் மானக் காப்புநிதி: தேய்மானத் தை ஈடுகட்ட உருவாக்கப்படு வது.

depression – தாழ்ச்சி: இறக்கம். பொருளியலில் ஏற்படும் கடுமையான பின்னடைவுக் காலம்

devaluation – மதிப்பிறக்கம்: மதிப்புக் குறைப்பு. பொன் முதலிய செலாவணிகள் தொடர்பாக, ஒரு செலாவணி மதிப்பு வீழ்தல். இது ஏற்றுமதி விலையைக் குறைத்து. இறக்கு மதி விலையை அதிக மாக்குவது.

diminishing balance method –குறைந்துசெல் இருப்பு முறை: தேய்மானத்தில் பயன்படுவது.

diminishing returns - குறைந்துசெல் திருப்பம்.

direct costs – நேரடி ஆக்கச் செலவுகள்: நேர் அடக்கச் செல வுகள். ஒரு பொருள் உற்பத்தி செய்யப்படுவதில் கணக்கிடப் படும் கச்சாப் பொருள்கள், உழைப்பு ஆகியவை. ஒ. overhead costs.

direct debit – நேரடிப்பற்று: கணக்கு வைத்திருப்பவர் வங்கிக்கு அளிக்கும் நிலை யான ஆணை. இவர் காசோலைக் கணக்கிலிருந்து மூன்றாவது ஆளுக்கு இதில் ஒழுங்கான செலுத்தீடுகள் செல்லும். இதில் தோராயத் தொகை அனுப்பப்படும்.