பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

direct

44

discre


direct marketing — நேரடி அங்காடி முறை: நுகர்வோரிடம் நேரடியாக விற்பனைத் தொடர்பு கொள்ளுதல்

director - இயக்குநர்: ஒரு நிறு வனத்தின் அன்றாட மேலாண்மையைக் கவனிக்க அமர்த்த படுபவர். பொது நிறுவனத்திற்குக் குறைந்தது இரு இயக்குநர்களும் தனியார் நிறுமத்திற்குக் குறைந்தது ஓர் இயக்குநரும் இருக்க வேண்டும். இயக்குநர்கள் தொகுதி இயக்குநர். அவை எனப்படும். பொதுவாக, ஒரு நிறுவனப் பொறுப்பாளர் இயக்குநர் ஆவார்

director's report – இயக்குநர் அறிக்கை: ஒரு நிறுமத்தின் இயக்குநர்கள் அதன் பங்குதாரர்களுக்கு அளிக்கும் ஆண்டு அறிக்கை. சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய ஒன்று

disbursement – கொடுப்பு: ஒரு வங்கியர் தன் வாடிக்கையாளருக்கு வழங்குந் தொகை. இவ்வாடிக்கையாளர் தன் தொழில் பணிக்காகப் பணம் பெறும் பொழுது, இதைத் திருப்பிக் கொடுப்பார்

discharge – தீர்:தீர்த்தல். சட்டப்படி செய்து கொண்ட ஓர் உடன்பாட்டிலிருந்து ஒருவரை விடுவித்தல். எ-டு. கடன் தொகையைச் செலுத்திக் கடன் தீர்த்தல்

discharge of bill – உண்டியல் தீர்வு: பணம் செலுத்தி இது தீர்க்கப்படும்

disclosure – தெரிவிப்பு: 1) ஒப்பந்த விதிப்படி அதில் ஈடுபட்ட இருவம், அது தொடர்பான எல்லா உண்மைகளையுங்கூறல். 2) நிறும விதிப்படி, தன் பங்குதாரர்களுக்கு, ஒரு நிறுமம் அதன் வணிகத் தொடர்பான எல்லாச் செய்திகளையும் கூறுதல்

discount –வட்டம்; கழிவு. 1) முதிர்ச்சியாகு முன் மாற்றுண்டியலை வாங்கினால் பிடித்துக் கொள்ளப்படும் தொகை 2) பட்டியலில் விலைக்குக் கீழாகப் பொருள்களின் விலைக் குறைப்பு. பணம் கொடுப்பவருக்குப் பண வட்டம். வணிகருக்கு வணிக வட்டம். மொத்தமாக வாங்குபவருக்கு மொத்த வட்டம்

discount broker – வட்டத்தரகர்: கழிவு பெறுந்தரகர்

discount of bill — உண்டியல் வட்டம்: பட்டியல் கழிவு

discountnarket – வட்டந்தரும் சந்தை: கழிவு தரும் அங்காடி

discount rate – வட்டவீதம்: கழிவுத் தகவு. விழுக்காட்டில் தெரிவிக்கப்படுவது

discretionary order – தன் விருப்ப ஆணை: தன் விருப்