பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

dis

45

divi



பப்படி ஒரு சந்தைத் தரகர் குறிப்பிட்ட பிணையங்களையும் பொருள்களையும் வாங்க பெறுங்கட்டளை

dishonour - மறுத்தல்: 1) ஏற்க விரும்பாமை. மாற்றுண்டியல் மறுக்கப்படலாம். இது ஏற்கா மறுப்பு. மாற்றுண்டியலுக்குப் பணம் கொடுக்காமலிருக்கலாம். இது செலுத்தாமறுப்பு 2) வரும் காசோலைக்குப் பணங்கொடுக்க மறுத்தல். காசோலை கொடுப்பவர் கணக்கில் போதிய பணம் இல்லாமலிருக்கலாம். இதனால் ஏற்படுவது மறுப்பு

disinflation -- பணச்சீராக்கம்:பணச் செப்பம். வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்காமல், பணவீக்கத்தைத் தடுக்கும் ஒருவகைப் பணச் சுருக்கம். வட்டி வீத உயர்வு. விலைக் கட்டுப்பாடு முதலியவை இதற்குரிய நடவடிக்கைகள்

disinvestment:முதலீட்டுக் குறைப்பு: பொருளியலின் முதலின இருப்பைக் குறைத்தல். இது பொருளாதாரத் தாழ்ச்சியைத் தொடர்வது. இப்பொழுது அழிவுதேய்வினால் உண்டாகும் முதலீட்டுச் சரக்குகளின் மதிப்பை ஈடுசெய்யும் அளவுக்குப் போதிய முதலீடு இராது

distributable profits:பகிர்மான ஆதாயங்கள்' ஒரு நிறுமத்தின் பகிர்ந்தளிக்கக்கூடிய ஆதாயங்கள் .இவை பகிர்மான ஒதுக்கு நிதிகள் எனவும் பெயர் பெறும்

distribution – பகிர்மானம்: 1) பங்காதாயத் தொகை 2) முகவர்களுக்கிடையே நிதி வளங்களை ஒதுக்குதல் 3) நிகழ்தகவு மதிப்புகளைக் குறித்தல் 4) மொத்த வணிகர், சில்லரை வணிகர் மூலம் நுகர்வோருக்குச் சரக்குகளை அளித்தல் 5) சட்டப்படி ஒருவர் சொத்துகளைப் பிரித்தல்

distributor— பகிர்மானர்: பகிர்ந்தளிப்பவர். உற்பத்தியாளர் சரக்குகளை நுகர்வோருக்கு அளிக்கும் ஓர் இடைப்பட்ட ஆள்

diversification – பன்முகமாக்கல்: 1) பல நிறுமங்களைக் கொண்டு பல வகைப்பொருள் உருவாக்கல் 2) ஒரு முதலீட்டைப் பல நிறுமங்களில் பரவலாக அமையுமாறு செய்தல். பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும் பொழுது, கடும் இழப்புகள் இதனால் தவிர்க்கப்படும்

dividend – பங்குஈவு: பங்காதாயம் 1) ஒரு நிறுமத்தின் சம்பாதிப்புகளின் ஒரு