பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

double

47

easy


5) வணிகக்கணக்கு, இலாப நட்டக் கணக்கு, இருப்பு நிலைக் குறிப்பு ஆகியவை தயார் செய்யப் பயன்படுவது.

double entry system, principles of – இரட்டைப்பதிவு முறையின் நெறிமுறைகள்: I. பற்று - 1) பெறுபவரைப் பற்றுவைக்க. 2) உள்வருவனவற்றைப் பற்று வைக்க.3) செலவுகளையும் இழப்புகளையும் பற்று வைக்க. II வரவு - 1) தருபவரை வரவு வைக்க. 2) வெளிச் செல்பவற்றை வரவு வைக்க.3) வருமானங்களையும் ஆதாயங்களையம் வரவு வைக்க.

draft - வரைவோலை

draft - வரைவு: i) குறிப்பிட்ட தொகையைச் செலுத்துமாறு எழுதப்படும் ஆணை எ-டு. மாற்றுண்டியல். ii) இறுதி நிலை அடைவதற்கு முன் ஓர் ஆவணத்தின் தொடக்கமொழிவு.

drawee - வரையப்படுவர்: 1) மாற்றுண்டியல் எழுதப்படுபவர். 2) காசோலை அல்லது வரைவோலை எழுதப்படுபவர் சுருக்கமாக, இவற்றைப் பெறுபவர்.

drawer - வரைபவர்: 1) மாற்றுண்டியலை எழுதிக் கையெழுத்திட்டு வசூலுக்கு அனுப்புவர். 2) காசோலையில் கையெழுத்திட்டுப் பெறுநருக்கு அனுப்புபவர். இதனால் எழுதிய தொகைக்குப் பெறுநர் பணம் பெறலாம்.

drawings - எடுப்புகள்: பணம் அல்லது சரக்கு தொழில் நிறுவனத்திலிருந்து எடுக்கப்படுதல்.

durables — நீள் பயன் பொருள்கள்: பா. consumer goods.

duty - வரி: சில சரக்குகள் அல்லது பணிகளின் மீது அரசு விதிக்கும் வரி இனம் எ-டு இறப்பு வரி, சுங்கவரி.


E

earning capacity method – ஈட்டுதிறன் முறை: பங்கு மதிப்பு முறைகளுள் ஒன்று. இலாபம் ஈட்டும் திறன் அடிப்படையில் அமைவது. ஏனைய இரண்டு முறைகளாவன நிகரச்சொத்து முறை, வருவாய் முறை.

earnings per share – ஒரு பங்குச் சம்பாதிப்பு: ஓராண்டில் ஒரு நிறுமத்தின் சம்பாதிப்புகளை அதன் பொதுப்பங்குகளால் வகுத்து வரும் தொகை அல்லது ஈவு.

easy money – எளிய பணம்: பா. cheap money