பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

eco

effi

48

economic cost-பொருளாதார ஆக்கச் செலவு: ஒன்றைச் செய்யத் தேவைப்படும் முழு ஒப்படைப்பு. இது வாய்ப்பு ஆக்கச் செலவு கணக்கு ஆக்கச் செலவைவிடப் பெரியது.

economics-பொருளியல்:ஒரு சமூக அறிவியல். பண்ட மாற்று. பகிர்மானம், நுகர்வு, உற்பத்தி முதலிய துறைகளின் நடத்தையை ஆராய்வது. இதன் முதன் மையான கருத்துப் புலங்கள் இரண்டு 1) தொன்மைக்கருத்துப்புலம்: இதனை நிறுவியவர் ஆதம் சிமித். பொருளாதார மதிப்புக் கருத்தையும் செல்வம் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கு மிடையே (வகுப்புகள்) பகிர்ந்துள்ளதையும் இவற்றை வற்புறுத்தினார். மார்க்ஸ் கருத்துப் புலம் இதன் கிளைப்புகளில் ஒன்றே.

2) புதுத் தொன்மைக் கருத்துப் புலம்: இதை நிறுவியவர்கள் ஜெவான்ஸ் (1835-82) வார் லாஸ் (1834-1910) ஆகிய |இருவருமாவர். இவர்கள் இறுதி நிலையாளர்கள் எனப்படுவர். மேற்கத்திய பொருளியல் கருத்தின் ஆணிவேர் இப்புலமாகும்.போட்டியிடும் இருமுனைகளுக்கிடையே அரிதான வளங்கள் ஒதுக்கப்படும் பொழுது, அவற்றின் பங்கை இது வற்புறுத்துவது.

புதுத்தொன்மைப்பொருளியல். மெலும் இருவகைப்படும்:

1) சிறு பொருளியல்: தனிப் பொருளாதார அலகுகளுக் கிடையே (நுகர்வோர், நிறுவனம் முதலியன) தொடர்பை இது ஆராய்வது.

2) பெரும் பொருளியல்: பணம், பொருளாதாரத் திரட்சிகள், முழு வேலை வாய்ப்பு. அரசு ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பை அது பகுத்துப் பார்ப்பது. இவ்விரு துறைகளும் வற்புறுத்துபவை தனியாள் அல்லது குடும்பமே பகுப்பின் அடிப்படை அலகு வகுப்புகள் அல்ல.

edition- பதிப்பு: 1) ஒருநூலின் பதிப்பு. 2) பதிப்பின் எண்ணிக்கை.

editorial- தலையங்கம்: ஒரு சிக்கல் குறித்த உண்மைகளைப் பொதுமக்களுக்கும் அரசுக்கும் தெரிவிக்க நடுநிலையில் ஒரு எழுதப்படுவது.

editor – பதிப்பாசிரியர்: ஒரு நூலைப் பதிப்பப்பவர் 2) ஒரு பருவ இதழின் ஆசிரியர்.

efficiency-பயனுறுதிறன்: இது இரு வகைப்படும்: 1) தொழில் நுட்பத்திறன்: சிறும உட்பாடு களுடன் ஏற்கத்தக்க தன்மையுள்ள பெரும வெளிப்பாட்டை