பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

emp

equal

49

உண்டாக்கும் உற்பத்தியாளரின் திறமையின் அளவு, இது நிறுமங்களுத் தகுந்தவாறு வேறுபடும்.

2) பொருளியல் திறன்: மிகக் குறைந்த அடக்கத்தில் ஒரு விளைபொருளை உற்பத்தி செய்து, நுகர்வோருக்கு வழங்கும் ஒரு நிறுவனத்திறமையின் அளவு.

employee - வேலையாள்: ஒரு நிறுமத்தில் வேலைசெய்பவர், பணியாள்.

employer - வேலையளிப்பவர்:முதலாளி.

employment - வேலை வாய்ப்பு: வேலை உடைமை.

employment exchange —வேலை வாய்ப்பு நிலையம்: வேலை வாய்ப்புகளை அறிவிக்கும் அரசு நிறுவனம்.

encumbrance — வில்லங்கம் : பொறுப்பு அல்லது கடன் எ-டு. வீடு அடமானம்.

endorsement — மேலொப்பம்: 1) மாற்று ண்டியல் அல்லது காசோலையின் பின்புறம் இடப்படும் ஒப்பம். அது யாருக்கு ஒப்பம் செய்யப்படுகிறதோ அவர் அதில் கையெழுத்திட்டுப் பெறலாம். இது தனிமேலொப்பம், வரம்புடை மேலொப்பம் என இருவகை.

2) ஓர் ஆவணத்தைச் சட்டப்படி மதிப்புள்ள தாக்கத் தேவைப்படும் கையெழுத்து.மேலெழுத்து புறக்குறிப்பு என்றுங் கூறலாம்.

endowment - அறக்கட்டளை;அறநிறுவனம்.

endorsor -மேலெழுதுநர்.

endorsee-மேலெழுத்துப்பெறுநர்.

enterprise – தொழில் முயற்சி; தொழில்வினை.

entrepreneur -தொழில் முனைவோர்: தன் ஆதாயத்திற்காக ஒரு தனியாள் ஒரு பொருள் அல்லது பணியைச் சந்தைக்கு வழங்கு முயற்சியை மேற்கொள்பவர். இம் முயற்சி சமூகச் செல்வத்தை உயர்த்துவது. ஆகவே, இவர்களை ஆதரிப்பது அரசின் கடமை.

entries - பதிவுகள்: கணக்கேட்டில் பதிவு செய்யப்படுபவை. இவற்றின் வகைகள்; 1) தொடக்கப்பதிவுகள் 2) மாற்றுகைப்பதிவுகள் 3) பிழை நீக்கப் பதிவுகள் 4) இறுதிப் பதிவுகள் 5) சரிக் கட்டுப் பதிவுகள்.

equal pay – சம ஊதியம்: ஒரே வேலையில் இருக்கும் ஆண் பெண் ஆகிய இருவருக்கும் ஒரே ஊதியம் கொடுக்க வேண்டும் என்னும் நெறி முறை. தற்காலத்தில் இது மேலோங்கி யுள்ளது.