பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

equi

50

exch


equity, equity share – நேர்மைப்பங்கு : பொதுப்பங்கு. ஒரு நிறுவனம் வழங்குவது. குறைந்த பங்கு ஈவு உள்ளது. பணவீக்கக் காலங்களில் பெரிதும் விரும்பப்படுவது. முதல் வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது. பங்குகளில் ஒரு வகை. பா. shares,

equity capital-நேர்மைப்பங்கு: முதல், ஒரு நிறுமத்தின் பங்கு முதலின் பகுதி, பொதுப்பங்கு தாரர்களில் கொள்ளப்பட்டிருப்பது.

error in casting – தவறான கூட்டுப்புள்ளி: துணை ஏடுகளைக் கூட்டும் பொழுது ஏற்படுவது.

error of commission – செய் பிழை: சரியான கணக்கில் சரியான தொகையைத் தவறான பகுதியில் எழுதுதல்.

errors of complete omission— முழு விடு பிழைகள்: முதல் குறிப்பேட்டில் ஒரு நடவடிக்கை எழுதப்படுதல்.

error of partial omission – பகுதி விடுவிழை: துணை ஏட்டிலிருந்து பெரேட்டில் எடுத்தெழுதும் பொழுது, நடவடிக்கையின் ஒரு தன்மையை உரிய கணக்கில் எடுத்தெழுதாமல் விட்டுவிடுதல்.

error of principle – விதிப் பிழை: ஒரு தலைப்பில் எழுத வேண்டியதை வெறொரு தலைப்பில் பதிதல், கட்டிடப்பழுதுச் செலவு ரூ 100ஐ பழுத பார்ப்புக்கணக்கில் பற்றுவைப் பதற்கு மாறாகக்கட்டிடக் கணக் கில் பற்று வைத்தல்.

estate - சொத்து: உடைமை பொறுப்பு (கடன்) நீங்கிய ஒரு வரின் சொத்து மதிப்பு 2)

estate - பண்ணை: ஒரு பெரிய இல்லத்தோடு சேர்ந்த திட்டமான நிலம்.

estate duty – சொத்துவரி: ஒருவர் இறக்கும் பொழுது அவர்சொத்தின் மீது விதிக்கப்படும் வரி.

exceptional contracts – விதிவிலக்கான ஒப்பந்தங்கள்: வாணிப நற்பெயரின் மதிப்பை ஏற்படுத்துபவை.

exceptional items — விதிவிலக்கான இனங்கள்: அடக்கங்கள் அல்லது வருமானம். இவை நிறுமத்தின் இலாப நட்டக் கணக்கைப் பாதிப்பவை. வாணிப இலாபம் அல்லது நட்டத்தை வருவிக்கும் பொழுது, இவை வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒ.extra-ordinary items.

exchange - பரிமாற்று: பரிவர்த்தனை. இரு ஆட்கள் அல்லது குழுக்களுக்கிடையே மதிப்புகள் வாணிபம் செய்யப் படுவதற்குரிய பொருளாதார முறை. இயற்பொருள்கள்,