பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

fate

53

finan


பொருள்கள் எ-டு. மளிகை, இசைப் பேழைகள்

fate - விதி: நிலை, ஒரு காசோலை அல்லது உண்டியல் பணம் கொடுகப்பட்டுவிட்டதா அல்லது மறுக்கப்பட்டுவிட்டதா என்பது. இது பற்றி ஒரு வங்கி மற்றொரு வங்கியை வினவும்

favourable balance of trade – சாதக வாணிப இருப்பு நிலை

Fax - உருநகலி: இதன்மூலம் ஆவணங்கள்,படங்கள்,திட்டங்கள் ஆகியவற்றின் படிகளை வேண்டுமிடங்களுக்கு உடன் அனுப்ப இயலும். ஒரு தொலைபேசி அழைப்புக் காலத்திற்கு இணையான கட்டணத்ணைக் கொண்டது எ-டு: 30-60 வினாடிகள் 1X4 பக்க அளவு. ஒ. telex, teleprinter

fictitious asset — பெயரளவுச் சொத்து: இருப்புத்தாளில் காட்டப்படும் சொத்து எ-டு. நற்பெயர்.

final accounts — இறுதிக் கணக்குகள்: நிதியாண்டின் முடிவில் தயாரிக்கப்படும் கணக்குகள். 6 மாதங்களுக்குப் பின் தயாரிக்கப்படுபவை இடைக் காலக்கணக்குகள். இருப்பாய்வைக்கொண்டு தயாரிக்கப்படுபவை. இவற்றின் இருபகுதிகள் 1) வணிக இலாபநட்டக் கணக்கு 2) இருப்பு நிலைக் குறிப்பு

final involce — இறுதி இடாப்பு: முன் இடாப்புக்கு மாற்று. சரக்குகளின் விவரங்கள் தெரிவதற்கு முன் அனுப்பப்படுவது முன் இடாப்பு. முழு விவரங்களையும் கொண்டது இறுதி இடாப்பு. இடாப்பு-பட்டியல்

finance - நிதி: 1) பணத்தைக் கையாளுதலும் மேலாண்மை செய்தலும்

2) ஒரு புதிய தொழிலுக்குத் தேவைப்படும் முதல் 3) கடன் பணம். ஒரு நிதியத்தால் வழங்கப்படுவது

financial accountant : நிதிக் கணக்கர்: ஒரு நிறுவனத்தின் நிதிகளைக் கையாண்டு மேலாண்மை செய்பவர். அதன் ஆண்டுக் கணக்குகளையும் தயாரிப்பவர் ஒ. Cost accountant, management accountant

financial adviser — நிதி அறிவுரையாளர்: முதலீடு செய்பவருக்கு நிதி அறிவுரை வழங்குபவர்

financial investment — நிதி முதலீடு :பா.investment.

financial year — நிதியாண்டு. ஒரு நிறுவனத்தின் கணக்குகள் எழுதப்படும் காலம். இவ்வாண்டுக்கு வரவு செலவுகள் செய்யப்படும். பொதுவாக, இது ஏப்ரல் முதல் மார்ச் வரை

financier – நிதியர்: நிதியுள்ளவர்வர். ஒரு தொழில் முயற்சிக்குப் பணம் அளிப்பவர்