பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

fire

54

floa



fire insurance – தீக்காப்புறுதி; தீயினால் சொத்துகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்காகச் செய்யப்படுவது

firm - கூட்டுமம்: கூட்டு வாணிக நிலையம்: 1) தொழில் நிறு வனம் 2) தொழில் கூட்டாண்மை

firm underwriting - நிலை ஒப்புறுதி: ஒப்புறுதியாளர் அளிப்பது

fiscal policy - வருவாய்க் கொள்கை: பெரும் பொருளியல் நிலைமைகளை ஊக்குவிக்க அரசு செலவு செய்தல். பொருளாதாரப் பின்னடைவுகளின் பொழுது, வேலை வாய்ப்பு உண்டாக்கப் பொதுத்துறை வேலைகளை ஊக்குவிக்க வேண்டும் என்பது கெயின்ஸ் என்பார் கருத்து. இதனால் பணக்கொள்கையைவிட வருவாய்க் கொள்கை அதிகப் பயனுள்ளதாக இருக்கும்

fixed asset – நிலைச் சொத்து: கட்டிடம், நிலம் முதலியவை. இது முதலினம் சார்ந்தது

fixed capital-நிலை முதல்: ஒரு நிறுவனத்தின் நிலைச் சொத்துகளில் அடங்கி இருக்கும் முதல் அளவு ஒ. circulating capital,

fixed charge — நிலைக்கடன்: இதில் கடன் ஈந்தோர் கடனாளியின் குறிப்பிட்ட சொத்தை விற்றுத்தன் கடனைப் பெறுவதற்குரிய உரிமையுண்டு. கடனாளி கடனைச் செலுத்தத் தவறினால், இந்நிலைமை ஏற்படும்

fixed costs – நிலையாக்க செலவுகள்: மேற்செலவுகளில் ஒருவகை பா. overhead costs

fixed debentrue — நிலைக்கடன் ஆவணம்: பிணையமாக நிலையான பொறுப்புள்ள பத்திரம் பா. floating debenture.

fixed exchange rate – நிலை செலாவணி வீதம்: ஒரு செலாவணிக்கும் மற்றொரு செலாவணிக்குமுள்ள நிலையான வீதம். இதை அந்த அந்த அரசு உறுதிசெய்வது ஒ. floating exchange rate

fixed interest security – நிலை வட்டிப் பிணையம்: ஓராண்டுக்குக் குறிப்பிட்ட தடவைகள் நிலையான வட்டி வழங்கும் ஈடு

எ-டு. பத்திரங்கள், முன்னுரிமைப் பங்குகள்

fixtures and fittings – தொழில் நிலைப்பிடம்: ஒரு நிறுவனம் தன் தொழிலை நடத்த நிலையான அமைப்பு கொண்ட இடம். இது எந்திரம், கருவி நிலையம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது

flat money – ஆணைப்பணம்: செலாவணியாகக் கூடியது என்று அரசு உறுதியளித்த