பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

floa

55

fore


பணம். உலகின் பெரும் பாலான தாள் பணம் எல்லாம் ஆணைப்பணமே

floating assets – மாறு சொத்துகள்: உருமாறும் சொத்துகள்

floating charge - மாறு கடன்: ஒரு நிறுமத்தின் சொத்துகளின் மேலுள்ள பொறுப்பு. சட்டப்படியான பொறுப்பன்று

floating debenture – மாறுகடன் ஆவணம்: ஈடாக மாறும் பொறுப்பைக் கொண்டது ஒ. fixed debenture.

floating debt – மாறுகடன். குறுகிய காலக் கருவூல உண்டியல்களைக் கொண்ட தேசியக் கடனின் ஒரு பகுதி

floating exchange rate — மாறு செலாவணிவீதம்: ஒரு செலாவணிக்கும் மற்றொரு செலாவணிக்குமிடையே மாறும் வீதம். அங்காடி நிலவரங்களுக்கேற்ப இது அமையும் ஒ. fixed exchange rate.

floating policy – மாறுமுறிமம்: காப்புறுதி செய்யப்பட்ட ஒரே ஒரு தொகை. அது பல இனங்களை உள்ளடக்கியது. அதிலிருந்து முறியாளர் தனக்கு வேண்டிய இனங்களைச் சேர்க்கலாம்; வேண்டாதவற்றை நீக்கலாம்

floating rate interest – மாறு வீதவட்டி': சில பத்திரங்கள்,வைப்புநிதிச் சான்றிதழ்கள் முதலியவற்றிற்குச் சந்தைக்கேற்ப வட்டிவீதம் மாறுதல்

floating warranty-மாறு உறுதியளிப்பு: இது ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாறுதல்

flotation — விற்பனை தொடங்கல்: ஒரு நிறுவன இருப்பின் தொடக்க விற்பனை பொது மக்களுக்காகத் தொடங்குதல். ஒப்பந்தப்புள்ளி மூலம் நடை பெறுதல். இது நடைபெற்றவுடன் பங்குச் சந்தையில் பங்குகள் விற்கப்படும். ஒரு தொழிலுக்கு வேண்டிய புதிய முதலை உயர்த்த நடை பெறுவது

forced saving - கட்டாயச் சேமிப்பு: நுகர்பொருள் செலவைக் குறைக்கவும் சேமிப்பை உயர்த்தவும் அரசு எடுக்கும் பொருளாதார நடவடிக்கை. வரி உயர்வு. வட்டி வீத உயர்வு. விலை உயர்வு ஆகியவை மூலம் இது நடைபெறும்

forefeited share – இழப்புப் பங்கு: ஒரு நிறுவனத்தில் ஒரு பங்குதாரர் ஒரு பகுதியாக செலுத்துவது. பிற்பகுதியைச் செலுத்தாததால், செலுத்திய பகுதியை இழப்பார்

forefeiture - பறிமுதல்: பங்குப் பறிமுதல். இயக்குநர் அவைத் தீர்மானப்படி இச்செயல் நடைபெறும்.