பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

for

57

fund


forwarding agent – அனுப்பும் முகவர்.

forwarding charges – அனுப்பும் செலவுகள்: ஏற்றுகூலி, இறக்குகூலி முதலியவை

fraud – மோசடி: பா. forgery.

free capital - தடையிலா முதல்: பணமாகவுள்ள முதல் பா. liquid assets.

free competition – தடையிலாப் போட்டி :தடையிலாப்பொருளாதாரம். இதில் பொதுத்துறை குறைந்தும் தனியார் துறை மேலோங்கியும் இருக்கும்

freemarket - தடையிலா அங்காடி: வழங்கலுக்கேற்ற விலைகள் ஏறி இறங்கும் சந்தை. இதில் அரசு தலையீடு இல்லை

free trade – தடையிலா வணிகம்: தேசிய எல்லைகளில் சரக்குகளும் பணிகளும் சட்டம், வரி முதலியவற்றின் குறுக்கிடு இல்லாமல் நடைபெறுதல்

freight - கலக் கட்டணம்: கப்பல் மூலமும் சரக்குகளை அனுப்ப ஆகும் செலவு. இது கப்பல் கட்டணம். வானக்கலக் கட்டணம் என இருவகை. எதிர் காலத்தில் வாணவெளிக் கட்டணமும் சேரும்

freight, in Ward- உள் கலக்கட்டணம்.

freight, forward – பின்கலக் கட்டணம்: சரக்குகளுக்கு ஆகும் கட்டணத்தை வாங்குபவர் சேருமிடத்தில் செலுத்துதல்

freight note – கலக்கட்டண குறிப்பு: சரக்குகளைக் கப்பல் மூலம் அனுப்புவதற்குரிய கட்டணத்தைக் குறிப்பிடும் இடாப்பு

full cost pricing-முழு அடக்கச் செலவு: விலையாக்கல். முழு அடக்கச் செலவையும் சரக்குகளின் மீது ஏற்றுதல். இதில்அடக்கச் செலவு என்பது நிலை அடக்கச் செலவுகளையும் நேரடி அடக்கச் செலவுகளையும் கொண்டிருக்கும்.இதுவே ஆதாயம் தருவது

full employment — முழு வேலைவாய்ப்பு: நிறை வேலை உடைமை. ஒரு நாட்டின் எல்லாப் பொருளாதார வளங்களும் முழு அளவுக்குப் பயன்படுதல். பொருளியல் கொள்கையின் இறுதி இலக்கு இதுவே பா. over-full employment.

functions of money — பணத்தின் பணிகள்: பொருளியலில் பணத்தின் வேலைகளாவன: 1) செலாவணி ஊடகம் 2) கணக்கலகு 3) மதிப்புச் சேமிப்பு

fund - நிதி: குறிப்பிட்ட நோக்கத்திற்காக வைக்கப்படும் முதலீடு அல்ல்து பண ஒதுக்கீடு எ-டு. ஓய்வு ஊதிய மூலமளித்தல், அலகுகளாக விற்றல்