பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

fun

58

going


 funded debit-நீதிக்கடன்: தேசியக் கடனின் ஒரு பகுதியைக் குறிப்பிட்ட நாளில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்னும் கட்டாயம் அரசுக்கில்லை. இக்கடன் தொகுப்பு ஆண்டுத் தொகைகளாகவே இருக்கும்

furniture - அறைகலன்: அறையில் பயன்படுவது எ-டு. மேசை, நாற்காலி

futures contract – எதிர்கால ஒப்பந்தம்: குறித்த விலையில் குறித்த நாளில் எதிர்காலத்தில் குறிப்பிட்ட பொருளைக் குறிப்பிட்ட அளவில் வாங்க அல்லது விற்க ஒப்பந்தம் செய்து கொள்ளுதல்

future value – எதிர்கால மதிப்பு: கூட்டு வட்டிக்கு முதலீடு செய்யப்பட்ட ஒரு தொகையின் மதிப்பு வருங்காலத்தில் இருக்கும் அளவு



G

general offer — பொது விலைக் குறிப்பீடு: பொது மக்களுக்குச் செய்யப்படும் விலைக் குறிப்பீடு. பொதுவாக, நடுக்கடையில் சாளரத்தில் காட்சிக்கு விலையுடன் வைக்கப்படுள்ள பொருள்

general ledger adjustment account: பொதுப் பேரேட்டுச் சரிக்கட்டுக் கணக்கு: பொது பேரேட்டில் செய்யப்படுவது

general partner –பொதுக் கூட்டாளி: கூட்டாண்மையில் ஒருவர்

general profit and loss account - பொது இலாப நட்டக்கணக்கு

general reserve – பொதுக்காப்பு: தொழில் பெருக்கத்திற்காக இலாபத்தின் ஒரு பகுதியை ஒதுக்கிவைத்தல்

gift - கொடை ஒன்றையுங்கருதாமல் ஒரு சொத்து ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குச் செல்லுதல். இது அதிகமானால் இதற்கு வரியுண்டு

globalization – உலக அளவாக்கல்: நிதி அங்காடியில் முதலீட்டை அனைத்துலக அளவில் கொண்டு செல்லும் முறை. கட்டுப்பாடுநீங்கல், தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக இது நடைபெறுவது

global product – உலக அளவுப்பொருள்: ஒரே வாணிபப்பேரில் உலகம் முழுதும் விற்பனை செய்யப்படும் பொருள் எ-டு. கோக்கோகோலா

going concern concept-இயங்கும் வாணிபக் கருத்து: கணக்குப் பதிவுப் பயிற்சியின் நெறிமுறை. சூழல்கள் வேறு வகையில் அமையாத வரை, ஒரு தொழில் இயங்கிக் கொண்டே இருக்கும் என்னும் உய்மானம்