பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

group

60

hedg


பேரில் அங்காடிக் சிக்கலைப் பற்றிப் பலர் கலந்துபேசி ஒரு முடிவுக்கு வருதல். இது ஓர் அங்காடி ஆராயச்சி நுணுக்கம்

group-income - குழு வருமானம்: கூட்டு வரி இல்லாமல், ஒரு நிறுமத்தின் பங்குதாரர்களுக்குக்கிடையே பங்கு ஈவுகளையும் ஏனையவற்றையும் பிரித்துக் கொள்ளுதல்

group life assurance – குழு வாழ்நாள் காப்புறுதி: ஒரு நிறுவனத்திலுள்ள பணியாளர்கள் செர்ந்து செய்வது

group relief - குழுஉதவி: ஒரே தொகுதியாக உள்ள நிறுமங்கள் ஒன்று மற்றொன்றுக்குத் தன் வரிவிலக்கு நன்மையளித்தல்

growth - வளர்ச்சி: ஒரு சொத்தின் மதிப்பு உயர்வு. முதலீட்டில் வளர்ச்சி இருக்குமானால், தேவைப்படும் அதன் முதல் மதிப்பில் உயர்வு ஏற்படும்

growth industry – வளர்தொழிற்சாலை: ஏனைய தொழிற்சாலைகளைக் காட்டிலும் விரைவாக வளரும் ஒரு தொழிற்சாலை

growth stocks — வளர்ச்சி இருப்புகள்: முதலீடு செய்பவருக்கு நல்ல முதல் வளர்ச்சியை அளிக்கும் ஈடுகள். முதல் ஆதாயம் அளிப்பவை

guarantee – உறுதியளிப்பு: கடன் வாங்கியவர் கடனைக் கொடுக்கத் தவறும் பொழுது, உறுதியளிப்பவர் கடனைக்கொடுக்க வேண்டிவரும்

 பா warranty 

guarantor - உறுதியாளர்: கடனாளிக்குப் பிணையமாக இருந்து, அவர் கடனை அடைப்பதாக உறுதிமொழி கூறுபவர். கடனாளி கடனைக் கொடுக்கத் தவறினால், இவர் அவர் பட்ட கடனைக் கொடுக்க வேண்டிவரும்



H

hallmark - மன்றுமுத்திரை: தரத்தைக் குறிக்கப் பொருள்களில் இடப்படும் முத்திரை

hard currency — வன் செலாவணி: கடினச் செலாவணி. உலகம் முழுதும் ஒப்புக்கொள்ளப்பட்ட தாள் பணம்

head office – தலைமையகம் தலைமை அலுவலகம்

head office account – தலைமை அலுவலகக் கணக்கு

hedging - இழப்புக்காப்பு வணிகம்: விலை ஏற்ற இறக்கத்தினால் ஒரு வணிகத்தின் பொருள் நட்டமாகாதவாறு விற்க மேற்கொள்ளும் முயற்சி

hedging against inflation _ பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு,பொதுப் பங்குகள் ஏனைய முதலீடுகள் மூலம்