பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

hidden

61

human


பண வீக்கப் பாழாக்கல்களுக்கு எதிராக ஒருவர் தம்முதலைப் பாதுகாத்தல்

hidden reserve – மறைமுக ஒதுக்குநிதி: ஒக்கீட்டில் வைக்கப்படுவது. ஐந் தொகையில் தெரிவிக்கப்படுவதன்று

higher rates – உயர்வீதங்கள்: அடிப்படை வீதத்திற்கு மேலுள்ளவை

hire purchase – தவணைமுறை வாங்குகை: பொருள்களின் மொத்த விலையில் முதலில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்திப் பின் எஞ்சியுள்ள தொகையைத் தவணைகளில் செலுத்தல். இதற்கு உரிய ஒப்பந்தம் செய்து கொள்ளுதல். வங்கிமூலமும் தனியார் நிறுவனத்தின் மூலமும் இதைச் செய்யலாம்

hire purchase agreement – தவணைமுறை வாங்குகை உடன்பாடு: தவணையில் கடனாகக் கொடுக்கும் பொருளைத் தாம் ஏற்றுக்கொள்வதாக வாங்குநர் விற்குநருடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம்

hire purchase price– தவணைமுறை வாங்குகை விலை: பணவிலையுடன் வட்டி சேர்ந்த விலை. தவணைக் காலத்திற்கு விதிக்கப்படும் வட்டி

hire purchase trading account - தவணைமுறை வாங்குகை வணிகக் கணக்கு: விற்கும் நிறுவனம் தயார் செய்யும் கணக்கு

hire - தவணையர்: தவணை முறையில் வாங்குபவர்

holder – உடைமையர்: மாற்றுண்டியல் அல்லது கடன் உறுதிச் சீட்டைக்கொண்டிருப்பவர். இவர் பெறுபவர் அல்லது மேலொப்புநராக இருக்கலாம்

holding company — உடைமை நிறுமம்; தொகுதி நிறுமங்களில் பங்குகள் கொண்ட ஒரு நிறுமம்

home banking – இல்ல வங்கி நடவடிக்கை: இயல்பான வங்கி நடவடிக்கைகளை வங்கியுடன் இணைக்கப்பட்ட இல்லக்கணிப்பொறி மூலம் மேற்கொள்ளுதல். மேனாடுகளில் உள்ள வசதி

hot money - குறுநோக்கு பணம்: 1) ஒரு நிதிமையத்திலிருந்து மற்றொன்றிற்கு அதிக வட்டி நாடி குறுகிய அறிவிப்பில் செல்லும் பணம் 2) நேர்மையற்ற முறையில் சேர்ந்த பணம். அறிவது அரிது

human capital – மனித முதல்: ஒரு தனியாள் தன் பயிற்சியிலும் வேலைநுகர்விலும் பெறும் பொது, சிறப்புத் திறன்கள். 1960களில் இக்கருத்தை அறிமுகப்படுத்தியவர் கேரி பெக்கர். மனிதமுதல் திருப்பத்தைப் பகுதியாகக்