பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

human

61

impu


கொண்டிருப்பவை. கூலிகள் என்பது இதன் உட்கருத்து.

human resourcesமனித வளங்கள்: அறிவு, ஆற்றல், பண்பாடு முதலியவை.

hypothecationஅடமானம்: கொதுவை. தனியாரிடமோ வங்கியிடமோ ஒரு பொருளை ஈடாகவைத்துப் பணம் பெறுதல். இது எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தும்.



I

image - மாண்பு: ஒருவரைப் பற்றி அல்லது ஒரு நிறுவனத்தைப் பற்றி உருவாகும் மதிப்பு. விளம்பரமும் பொது மக்கள் தொடர்பும் இதற்குப் பெரிதும் உதவும்.

impact dayவெள்ளோட்ட நாள்: பங்குகளின் புதிய வழங்குகையின் நிபந்தனைகள் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்படும் நாள்.

impersonal accountஆள்சாராக் கணக்கு: ஆள் பெயர் குறிப்பிடப்படாத கணக்கு. இது பெயரளவு கணக்கே. இதில் ஊர்திகள், வணிக இருப்பு முதலியவற்றின் பெயர் மட்டுமே இருக்கும் ஒ. personal account.

import depositஇறக்குமதி வைப்புத் தொகை: இறக்குமதியாளர் செலுத்த வேண்டிய தொகை.

Import dutyஇறக்குமதி வரி: இறக்குமதிப் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரி. இது நிலையான தொகையாகவோ சரக்கு மதிப்புகளின் விழுக்காடாகவோ இருக்கும்.

import licence - இறக்குமதி உரிமம்: பொருள்களை உள்நாட்டுக்குக் கொண்டுவர மைய அரசு வழங்கும் அனுமதி.

import restrictionsஇறக்குமதிக் கட்டுப்பாடுகள்: வெளிநாட்டிலிருந்து பொருள்கள் உள்நாட்டுக்குக் கொண்டு வருவதில் விதிக்கப்படும் வரம்புகள்.

imports - இறக்குமதிகள்: தேவையின் அடிப்படையில் அயல்நாட்டிலிருந்து வாங்கும் பொருள்கள்.

Imprest accountமுன் பணக்கணக்கு : சில்லரைச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் கணக்கு.

imprest system முன் பணமுறை: ஒரு வாரம் அல்லது ஒரு திங்களுக்குரிய சில்லரைச் செலவுகளுக்குக் கொடுக்கப்படும் முன் தொகை. இது சில்லரைக் காசாளர் பொறுப்பில் இருக்கும்.

imputed cost கணக்கிடு ஆக்கச் செலவு: முன்னரே