பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

Incen

63

ind


உள்ள வளத்தைப் பயன்படுத்துவதிலுள்ள வாய்ப்பு அடக்கச் செலவை மதிப்பிடல். ஒரு செயல் முறையில் உண்மை அடக்கச் செலவைப்பெறக் கணக்கிடு ஆக்கச் செலவினை உண்மைச் செலவோடு சேர்க்க வேண்டும்

incentive -ஊக்குவிப்பு: ஒரு முயற்சியை ஊக்குவிக்கக் கொடுக்கப்படும் பொருள்

income வருமானம்:

1) ஒருவர் : அல்லது ஒரு நிறுமம் தன் முயற்சிக்குக் கைம்மாறாகப் பெறுவது. கைம்மாறு என்பது சம்பளம். வணிக ஆதாயம் ஆகியவற்றைக் குறிக்கும் அல்லது முதலீட்டில் வரும் திருப்பம். திருப்பம் என்பது வட்டி, வாடகை முதலியவை. வரி விதிப்பு நோக்கில் பார்க்க, முதலிலிருந்து வருமானம் வேறுபட்டது

2) பொருளியலில் குறிப்பிட்ட காலத்தில் ஒருவர் அல்லது பலருக்கு உரித்தாகக் கூடிய பொருளாதார மதிப்பின் ஒட்டம்

income and expenditure account - வரவு செலவுக் கணக்கு: இலாப நட்டக் கணக்கு போன்றது

income profit - வருமான இலாபம்: வருமானமாக வரும் தொகை

income stock — வருமான இருப்பு: உயர் வருமானத்தைக் கொண்டுவர வாங்கப்படும் பங்கு

income tax - வருமான வரி: வருமானத்தின் மீது நேரிடையாக விதிக்கப்படும் வரி

incorporation – கூட்டு உருவாக்கம்: ஒரு நிறுமம் உண்டாக்கப்படல்

incremental costs – உயர்வு ஆக்கச் செலவுகள்: குறிப்பிட்ட நிகழ்ச்சியினால் தோன்றும் அடக்கச் செலவுகள்

indemnity - ஈட்டுறுதி: 1) ஓர் உடன்பாடு. ஒருவர் மற்றொருவருக்கு ஏற்படும் இழப்பைப்பணத்தாலோ பழுது பார்ப்பதாலோ மாற்றீடு செய்வதாலோ ஈடுசெய்வதாக உடன்படல் 2) பங்குச் சான்றிதழ்கள், வழிப்பட்டியல் முதலிய ஆவணங்கள் இழக்கப்படும் பொழுது கொடுக்கப்படும் உறுதிமொழி எடுத்துக்காட்டாக, வாங்குநர் சரக்கு ஊர்திப் பட்டியலைத் தவறவிட்ட பொழுது இந்த ஈட்டுறுதியை எழுதிக்கொடுத்த பின்னரே தான் சரக்கை எடுக்கமுடியும்

Indent - தேவைப்பட்டியல்: ஒரு நிறுமத்திற்கு வாங்க வேண்டிய பொருள்களின் நிரல். இப்பட்டியல் தயாரித்து விலைப்புள்ளி கேட்டு முடிவு செய்தபின், கட்டளையின் பேரில் அவை வாங்கப்படும்