பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

inno

65

inte


innovation- புத்தாக்கம்: புதியது புனைதல். ஒரு முயற்சியில் புதிய நுட்பங்களைக் கையாளுதல். இது புதிய அணுகுமுறை. முழுக்க முழுக்கத் தொழில் முயற்சிகள் சார்ந்தது

İnsolvency - நொடித்தல்: வாங்கிய கடனைத் திருப்பித்தர இயலாத நிலை. இது தனியாரானால் ஓட்டாண்டி நிலையைக் குறிக்கும். நிறுமமானால் கலைப்பைக் குறிக்கும்

instalment —தவணை

பா hire purchase,

instalment system - தவணை முறை

instrument

1) கருவி: தன் பெரும் பொருளியல் இலக்குகளை அடைய அரசுக்குப் பயன்படும் சாதனம். எடுத்துக்காட்டாக, வட்டி வீதங்களும் பண வழங்குகையும் நிலைத்த விலைகளைக் கொள்வதற்குரிய கருவிகளாகும். அரசு வரியும் செலவும் முழு வேலை வாய்ப்பை அளிக்கும் கருவிகள்

2) ஆவணம் : முறையான சட்ட உரிமையுள்ள பத்திரம் பா. negotiable instrument

insurance – காப்புறுதி; காப்பீடு. ஈட்டுறுதி. இது ஒரு சட்டப்படியான ஒப்பந்தம். இதில் காப்புறுதி செய்பவர் காப்புறுதி பெறுபவருக்கு இடர் வரும் பொழுது குறிப்பிட்ட தொகை அளிக்க உறுதி மொழியளிப்பார். காப்புறுதி பெறுபவர் இறப்பின், அதற்குத் தகுந்த தொகை அவர் வாரிசுக்குக் கிடைக்கும். பொதுவாகக் காப்புறுதி, இடர் கருதியே செய்யப்படுவது

insurance policy – காப்புறுதி முறிமம் : காப்புறுதிப் பத்திரம். காப்புறுதி ஒப்பந்த நிபந்தனைகள் கொண்டது

insurance premium –காப்புறுதி முனைமம்: காப்புறுதி மேல் தொகை. மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு எனப்பல காலவகைகளில் செலுத்தும் தொகை

insurer - காப்புறுதியர்: காப்புறுதி செய்பவர். இது பொதுவாக நிறுவனமாகும்

insured - காப்புறுதி பெறுநர்: காப்புறுதி முறி எடுப்பவர். பொதுவாக, இவர் தனி ஆளே

intangible asset – புலனாகாத் சொத்து: தொட்டு உணர முடியாதது எ-டு. நற்பெயர், உரிமை முத்திரைகள், வாணிபக்குறி . ஒ. tangible asset

integration – தொகையாக்கல்: பொது நன்மைக்காக, ஒரே கட்டுப்பாட்டில் பல நிறுவனங்கள் ஒன்று சேர்தல். வாணிப முன்னேற்றமும் ஆதாயமுமே இதன் பெருநன்மைகள். பக்கத் தொகையாக்கல், செங்குத்துத்