பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

Inte

66

inv


 தொகையாக்கல், முன்னோக்கு தொகையாக்கல் என இது மூவகை ஒருங்கிணைப்பு என்றுங்கூறலாம்

intellectual property –அறிவுச்சொத்து : புலனாகாச் சொத்து எ-டு. நூலுரிமை, உரிமை முத்திரை பா. royalty.

interest - வட்டி: கடன் வாங்கிய பணத்திற்கு அளிக்கும் கட்டணம். இது விழுக்காடாகத் தெரிவிக்கப்படுவது. 12% ஒரு வட்டி. 24% இரண்டு வட்டி. தனி வட்டி, கூட்டு வட்டி என இது இருவகை

பொருளியலில் வட்டியின் வேலைகள் இரண்டு: 1) குடும்பச் சேமிப்புத் தொகை முதலீடாகிறது 2) செலவழிக்கும் தொகை பொருள் வழங்கலாக மாறுவது. பணத்தேவையைப் பொறுத்து வட்டிவீதங்கள் அமைகின்றன

interim dividend - இடைக்காலப் பங்கு ஈவு

international monetary fund, IMF - அனைத்துலகப் பண நிதியம், அபநி: ஐநாவின் தனிப்பட்டநிறுவனம். 1945-இல் நிறுவப்பட்டது. அனைத்துலகப் பண ஒத்துழைப்பை உயர்த்துவது

intrinsic value – உள்ளார்ந்த மதிப்பு : 1) ஒரு பொருள் தன் இயல்பினால் கொண்டுள்ள மதிப்பு. இயல் மதிப்பு எனலாம்

2) ஒரு வணிக விருப்பப் பேரத்தில் அமையும் ஈட்டின் அங்காடி மதிப்புக்கும் நடப்பு விலைக்கும் உள்ள வேறுபாடு பா. time value.

introduction - அறிமுகப்படுத்துதல்: பங்குகள் வழங்கும் முறை

inventory - பொருள் பட்டியல்: ஒரு வீட்டிலுள்ள இனவாரியான பொருள்களின் பட்டியல்

investment - 1) முதலீடு: முதலின சரக்குகள் வாங்குதல். எந்திரம், ஆலை, இவற்றில் நுகர்வதற்குரிய பொருள்கள் உண்டாக்கப்படுதல். இது மூலதன முதலீடு எனப்படும். இது அதிகமாக அதன் வளர்ச்சியும் அதிகமாகும்

2) ஈடுகள், வைப்பு நிதிகள் முதலியவை வாங்குதல். இதன் நோக்கம் நிதித்திருப்பத்தை வருமானமாகவும் முதல் ஆதாயமாகவும் பெறுவது. இதற்கு நிதி முதலீடு என்று பெயர். இது சேமிப்பு வழிவகையாகும். வட்டி வீதம், ஆதாயம். தொழில் சூழல் ஆகிய காரணிகளோடு இம்முதலீட்டு அளவு தொடர்பு கொண்டிருக்கும்.

investment, capital – மூலதன முதலீடு பா. investment.

investment, financial — நிதி முதலீடு பா. investment.