பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

lea

69

less




leasing - 1) குத்தகைக்கு விடல் 2) வாடகைக்கு விடல்

ledger - பேரேடு: கணக்குகளை இனவாரியாகப் பதியும் ஏடு. இவைகளுக்கு மூலம் குறிப்பேடு. இதில் ஒவ்வொரு பக்கத்திலும் ஓர் இனக்கணக்கு இருக்கும்

ledger, kinds of – பேரேட்டு வகைகள்: இது இரு வகைப்படும்

1) ஆள்சார் பேரேடு: இது மேலும் இரு வகைப்படும்: i) கடன் ஈந்தோர் பேரேடு: அனைத்துக் கடன் ஈந்தோர் கணக்குகளும் இதில் இருக்கும்

ii) கடனாளிப் பேரேடு: அனைத்துக் கடனாளிகள் கணக்குகளும் கொண்டது இது

2) ஆள் சாராப் பேரேடு: வேறுபெயர் பொதுப் பேரேடு. இது சொத்துக் கணக்குகள் பெயரளவுக் கணக்குகள் என இருவகை

ledger, uses of – பேரேட்டின் பயன்கள்:

1) குறிப்பிட்ட ஒரு கணக்கின் நிலையைப் படம் பிடித்துக் காட்டுவது. எடுத்துக்காட்டாகத் தாள் கொள்முதல் எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்ளலாம்

2) குறிப்பிட்ட ஒரு கணக்கிற்குரிய எல்லா நடவடிக்கைகளையும் ஒன்று திரட்டி, இறுதி விளைவை வெளிப்படுத்துவது

3) ஒரு தலைப்பிலான மொத்தச் செலவை எளிதாகக் காட்டும். எடுத்துக்காட்டாகச் ஒரு மாதத்திற்குக் கொடுத்த ஊதியத்தைத் தெரிந்து கொள்ளலாம்

4) இதன் கணக்குகள் காட்டும் இருப்புகளைக்கொண்டு இருப்பாய்வு தயார் செய்யலாம். இதைக் கொண்டே ஆதாயத்தை அறியும் இலாப நட்டக் கணக்குகளும் நிதிநிலையை உணரும் இருப்பு நிலைக்குறிப்புகளும் தயார் செய்யப்படுகின்றன

legacy - உயில் கொடை: உயில் மூலம் வாணிப நோக்கற்ற நிறுவனங்கள் நன்கொடையாகப் பெறும் தொகை. ஒரு முதலின வரவு

legal reserve – சட்டமுறை ஒதுக்கு நிதி: ஒரு நிறுவனம் சட்டப்படி ஒதுக்க வேண்டிய குறைந்த தொகை

legal tender - சட்டமுறைப் பணம்: ஒரு கடனை அடைக்க ஏற்றுக் கொள்ளப்படும் பணம். இது வரையறை உள்ளது, இல்லாதது என இருவகை

lessee - leaser

1)குத்தகைக்காரர்: ஒரு சொத்தின் விளைபயனைக் குத்தகையின் பேரில் நுகர்பவர்

2) வாடகையர்: ஒரு வீட்டைக் குடிக்கூலி கொடுத்துப் பயன்படுத்துபவர்