பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

let

70

liquid


 letter of hypothecation — அடமானக் கடிதம்: அடகு வைக்கப்பட்ட பொருள்களை விற்க வாங்கும் கடிதம்

letter of indemnity - ஈட்டுறுதிக்கடிதம்: இதைப் இழப்பீட்டிற்கு. இக்கடிதத்தை வழங்கும் நிறுவனம் பொறுப்பேற்கும்

Liabilities - பொறுப்புகள்:கடன்கள்

liabilities, kinds of — பொறுப்பு வகைகள்:

1) நெடுங்காலப் பொறுப்புகள்: நீள்தவணைக் கடன், முதல்

2) நடப்புப் பொறுப்புகள்: செலுத்துவதற்குரிய மாற்றுண்டியல், குறுந்தவனைக் கடன்

3) நிகழ்வடைவுப் பொறுப்புகள் தீர்ப்பளிக்கப்படாமலுள்ள பொறுப்புகள்

licence - உரிமம்: ஒரு தொழில் நடத்த அரசு வழங்கும் அனுமதி. இதன் நோக்கம் அரசு வருவாய் பெறுவதே

licensed dealer — உரிமம் பெற்ற வணிகர்: அரசு அளிக்கும் உரிமத்தோடு வணிகம் செய்பவர்

எ-டு. மளிகை வணிகர்

lien - பற்றுரிமை; உரிமைகோரல் தீரும் வரை ஒருவர் மற்றொருவர் சரக்குகளை வைத்திருக்கும் உரிமை. இது பொதுப் பற்றுரிமை, சிறப்புப் பற்றுரிமை என இருவகை

life assurance – காப்புரிமை அறுதி உறுதி: காப்புறுதிமுறி. ஒருவர் இறந்த பின் குறிப்பிடப்பட்ட தொகை அளிப்பது

limit - வரையறை:

1) பெருமவிலைக்கு வாங்கவும் சிறுமவிலைக்கு விற்கவும் ஒரு முதலீட்டாளர் தன் தரகருக்கு அளிக்கும் ஆணை

2) குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாள் வணிகத்தில் சில சந்தைகளில் அனுமதிக்கப்படும் பெரும ஏற்ற இறக்கங்கள்

limited company – வரையறுக்கப்பட்ட நிறுமம்: நிறுமக் கடன்களைப் பொறுத்தவரை உறுப்பினர்களின் பொறுப்பு வரையறை செய்யப்பட்டது. பங்குகளாலும் உறுதியளிப்பாலும் அவ்வாறு வரையறை செய்யப்படுவது அமையும்

limited liability – வரையறுக்கப்பட்ட பொறுப்பு

limited partner - வரையறுக்கப்பட்ட கூட்டாளி

பா. partnership

liquid assets – நீர்மைச்சொத்துகள்: உருமாறும் சொத்துகள். எளிதாகப் பணமாக்கக் கூடியவை

எ-டு. முதலீடு, வைப்பு நிதி