பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

liqui

71

Mana


liquidation – கலைப்பு: செயல்படாத நிலையில், ஒரு நிறுமத்தின் சொத்துகளை அதன் கடன் ஈந்தோர்க்கும் உறுப்பினர்களுக்கும் பகிர்ந்து கொடுத்த பின், அதைக் கலைத்தல். இதனோடு அதன் வாழ்வு முடிவுறும்

liquidator – கலைப்பாளர்: ஒரு நிறுமத்தின் கலைப்பு அலுவல்களைக் கவனிக்க நீதிமன்றத்தால் அல்லது நிறுமத்தால் அமர்த்தப்படுவர்

liquidity - நீர்மைத்திறன்: ஒரு நிறுமத்தின் சொத்துகள் மாற்றப்படும் திறன் அளவு

list price - பட்டியல் விலை: 1) ஒரு நுகர் பொருளின் சில்லரை விலை. உற்பத்தியாளர் பரிந்துரைப்படி விலைப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருப்பது

2) வழங்குவோர் விலைப்பட்டியலில் கழிவு நீக்குவதற்கு முன் குறிப்பிடப்படுவது

litigant - வழக்காடுபவர்: சட்ட நடவடிக்கை எடுப்பவர்

litigation - வழக்காடல்: சட்டநடவடிக்கை எடுத்தல்

loan - கடன்: திருப்பித்தரப்படும் உறுதி மொழியில் கொடுக்கப்படும் பணம். இதற்கு வட்டியுண்டு. தனியாரும் வங்கியும் கடன் கொடுப்பவை. குறுங்காலக் கடன், நெடுங்காலக் கடன் என இது இருவகை

loan account – கடன் கணக்கு: கடன் வாங்கியவர் பெயரில் இருக்கும் கணக்கு

loan capital – கடன் முதலீடு: முதலீட்டிற்காக வாங்கும் கடன். தனியாருக்கோ நிறுவனத்திற்கோ தேவைப்படுவது

long term debit – நெடுங்காலக்கடன்

long term liability – நெடுங்காலப் பொறுப்பு: உடன் செலுத்தப்படாத கடன். 10 ஆண்டுகள் வரை உள்ளது

lump sum - முழுத் தொகை : பகுதியாக அல்லாமல் ஒரே தடவை முழுதுமாகக் கொடுக்கப்படும் கடன்

luxury good – ஆடம்பரப்பொருள்: இன்ப வாழ்க்கைப் பொருள் எ-டு. தொலைக்காட்சிப் பெட்டி



M

machine hour rate method – எந்திர மணி வீத முறை: எந்திரத் தேய்மானத்தைக் கணக்கிடும் முறை

management — மேலாண்மை: ஒரு நிறுவனத்தை நடத்துதல். இது ஒர் உற்பத்திக் காரணி. இதில் நிலம், உழைப்பு, முதல் ஆகியவை அடங்கும்

இதன் முதன்மையான இரு பகுதிகள்