பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

mana

72

man


1) அமைப்புத்திறன்: இதிலுள்ள மேலாண்மை நுணுக்கங்கள், நெறிமுறைகல் ஆகியவை கல்லூரிகளிலும் தொழிற்பள்ளிகளிலும் கற்பிக்கப்படுபவை

2) தொழில் முனைவு அறிவு: வாய்ப்புகளைப் பயன்படுத்துதல், சந்தைத் தேவைகளையும் போக்குகளையும் முன் கூட்டியறிதல், இலக்குகளை அடைதல் முதலியவை பட்டறிவு மூலம் அறியப்படுபவை. பொதுவாக, ஒரு நிறுவனத்தை நடத்தும் அனைவரும் இதில் அடங்குவர்

management, kinds of —மேலாண்மை வகைகள்:

1) உற்பத்தி மேலாண்மை: உற்பத்தியைக் கவனித்தல். நிறுவனம் வழங்கும் பணிகளை ஒழுங்குபடுத்தல்

2) பணிக்குழு மேலாண்மை: பணிக்குழுவினரைக் கவனித்தல்

3) போக்குவரத்து மேலாண்மை: போக்குவரத்தைக் கவனித்தல்

4) பணி மேலாண்மை: பணிகளைக் கவனித்தல்

5) மேல் மேலாண்மை: மேலாண் இயக்குநர், மேலாளர்கள், மற்றும் இயக்குநர்கள் கொண்டது

6) நடு மேலாண்மை: பெரும்பாலும் மேலாளர்களைக் கொண்டது

management accountant — மேலாண்மைக் கணக்கர்: ஒரு நிறுவனத்தின் செயல் விளைவுகளைப் பற்றி எடுத்துக் கூறுபவர். நிறுவனத்தின் நிதி நிலைமை, வளர்ச்சி முதலியவற்றையும் கவனிப்பவர்

management consultant – மேலாண்மை அறிவுரையாளர்: ஒரு நிறுவனம் தன் ஆதாயத்திறனை எவ்வாறு உயர்த்துவது என்பது பற்றி அறிவுரை கூறுபவர். இது அவருக்குத்தொழில்

managing director — மேலாண் இயக்குநர்: ஒரு நிறுமத்தின் தலைவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர். நிறும அன்றாட அலுவல்கள் நடைபெற அவரே காரணம்

mandate – ஆணையுரிமை: ஒருவர் சார்பாக மற்றொருவர் செயல்பட வழங்கும் உரிமை. கொடுப்பவர் இறக்கும் பொழுதும் நொடிக்கும் பொழுதும் இது நீங்கும் ஒ. power of attorney.

mandator — ஆணை உரிமையர்: ஆணை உரிமை அளிப்பவர்

mandatory – ஆணையுரிமை பெறுநர்: ஆணை உரிமைக் குரியவர்

manhour – மனித மணி : ஒருவர் ஒரு மணிக்குச் செய்யும்